தொடர் பின்னடைவில் திமுக; பஞ்சாயத்து செய்து சீட்டுகளை வாங்கிய கூட்டணி கட்சிகளின் நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பல முக்கிய தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக முன்னிலை பெற்று வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

தற்போதைய நிலவரப்படி தவெக 108, அதிமுக 73, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக சதமடித்து முன்னிலையில் நீடிக்கிறது.

இந்நிலையில் தொடர் பின்னடைவை சந்தித்து வரும் திமுக கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

திமுகவிடம் 10 தொகுதிகளைக் கேட்டு வாங்கிய தேமுதிக 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அதாவது விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் முன்னிலையில் இருக்கிறார்.

அதுபோல 8 தொகுதியில் போட்டியிட்ட விசிக காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

பல பஞ்சாயத்துக்களை செய்து திமுகவிடம் 28 தொகுதிகளைப் பெற்ற மூன்று இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.

5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 இடங்களில் முன்னிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

TN Election Results : முதலிடத்தில் தவெக… மூன்றாம் இடத்தில் திமுக! – பரபரக்கும் முன்னணி நிலவரம் | Live

Severe turmoil in Walparai; DMK and TAVAK taking turns leading; what is the current situation?