4 மாநில முன்னணி நிலவரம்!
மேற்கு வங்கத்தில் பதற்றம்; மத்தியப் படைகள் குவிப்பு!
#WATCH | West Bengal | Clash erupts between BJP and TMC workers in Cooch Behar’s Dinhata, Central Forces personnel resort to lathi-charge pic.twitter.com/1UyxSq7KEN
— ANI (@ANI) May 4, 2026
அரியாங்குப்பம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஐயப்பன் வெற்றி

உசுடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி!
மம்தா தொடர் பின்னடைவு!

பபானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது சுற்றின் முடிவில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 1558 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் வேடர்பாளருமான மம்தா பானர்ஜி இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறார்.
புதுச்சேரியில் அதிமுக 1 இடத்தில் வெற்றி!

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகிக்க, உப்பளம் தொகுதியில் அதிமுக புதுச்சேரி செயலர் அன்பழகன் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதுச்சேரியில் தொடர்கிறதா என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி?

கேரளாவில் ஆட்சியமைக்கும் UDF?

மேற்கு வங்கத்தில் 173 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை!

அஸ்ஸாமில் தொடரும் பாஜக-வின் ஆதிக்கம்!

அஸ்ஸாமில் தனிப்பெரும் கட்சியாக பாஜக தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கடந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 126 இடங்களில் 64 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், பாஜக கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 23 இடங்களிலும், AIUDF கட்சி ஓர் இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளாவில் பெரும்பான்மையை உறுதி செய்யும் காங்கிரஸின் UDF கூட்டணி?

கேரளத்தில் நடைபெற்று வரும் விறுவிறு வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி ஆட்சி அதிகாரத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆட்சியமைக்க 71 இடங்கள் தேவை எனும் நிலையில், தற்போதைய நிலவரப்படி UDF கூட்டணி 71 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான UDF கூட்டணி 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த பாஜக?

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கடந்துள்ளது. அந்தக் கூட்டணி 158 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மம்தா தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
மம்தாவை பின்னுக்கு தள்ளிய சுவேந்து அதிகாரி!

மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இந்தத் தொகுதியில் சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி தவெக முன்னிலை!
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயமாக, தவெக 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை வகித்து பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
புதுச்சேரி: EVM வாக்குகளை எண்ண தயாராகி வரும் அதிகாரிகள்!

#WATCH | Puducherry Elections 2026 | Counting of votes cast through EVMs begins at a counting centre in Puducherry. pic.twitter.com/5JzwbsrUaD
— ANI (@ANI) May 4, 2026
புதுச்சேரியில் வாக்குப்பெட்டிகள் எண்ண தயாராகி வருகின்றனர்
மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை!
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
கேரளம்: காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி முன்னிலை!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. LDF கூட்டணி 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மேற்கு வங்கம்: 294-ல் 293 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட தொடங்கியிருக்கின்றன. அங்கு ஃபால்டா தொகுதியில் மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை மே., 21-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
மத்தியப் படைகளின் கவச வாகனங்கள் ரோந்து பணி; மே., வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!
#WATCH | West Bengal Elections 2026 | Central forces’ armoured vehicles patrolling the Malda College counting centre premises. Central forces have been on alert since morning. Counting of votes will begin shortly. pic.twitter.com/YkBm57oO4y
— ANI (@ANI) May 4, 2026
மும்முனை போட்டி… புதுச்சேரியில் 2-வது முறையாக அமையுமா NDA ஆட்சி?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் NDA, INDIA கூட்டணிகள்… புது வரவாக விஜய் தலைமையிலான தவெக என மும்முரமான மும்முனைப் போட்டி நிலவுகிறது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி களமாடுகிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமையிலான அணிகள், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நம்பிக்கை தெரிவிக்கின்றனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருக்கிறது. அந்தக் கட்சி கணிசமான வாக்குகளைக் கவரும் என்றும் கூறப்படுகிறது. எனவே புதுச்சேரி தேர்தல் முடிவுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கவிருக்கிறது.
டெல்லி: பாஜக தலைமையகத்தில் தொண்டர்களுக்குத் தயாராகும் பூரி மற்றும் இனிப்புகள்!
#WATCH | Delhi: Poori and sweets being prepared at the BJP Headquarters in Delhi as counting of votes for the elections to the Assemblies of Assam, Keralam, Tamil Nadu, West Bengal and Puducherry will begin shortly.
Counting of votes for by-polls in seven Assembly… pic.twitter.com/UKdgMXc1rW
— ANI (@ANI) May 4, 2026
`மே., வங்கத்தில் சனாதன தர்மத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அரசாங்கம்’ – சுவேந்து அதிகாரி

நந்திகிராம் மற்றும் பவானிபூர் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “நான் லட்சுமி நாராயணன் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். கடவுள் நம்முடன் இருக்கிறார். சனாதன தர்மத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அரசாங்கம் வரவிருக்கிறது.” என வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கும் நிலையில் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுகையில், தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்து முடிந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை (மே 4-ஆம் தேதி) வெளியாக இருக்கின்றன. இதனிடையே, இந்தியத் தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலத் தேர்தல்களும் நிறைவடைந்த பிறகே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும்; புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியும், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் கூட்டணியும், அஸ்ஸாமில் என்.டி.ஏ கூட்டணியும் வெற்றிபெறும் எனவும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெரும் திருப்பமாகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து இறக்கி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே தேர்தல் நேரச் சலசலப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால், அங்கு ஒருவிதப் பரபரப்பு நிலவுகிறது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை காலை 8 மணிக்கு 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள் இந்த லிங்க்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
இந்த லைவ் அப்டேட்ஸ்… தமிழ்நாடு தவிர்த்து புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பானது.
நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், இங்கே தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
விகடன்.காம்-உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.