‘6 சீட்டுக்கு மேல கேக்காதீங்க!’ முடிவைச் சொல்லிய திமுக – ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

சி.பி.எம் – தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. குறைந்த சீட்டுக்கு ஒப்புக்கொள்ள சி.பி.எம் மறுத்த நிலையில் தி.மு.க-வே இறங்கி வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ. சண்முகம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க.

அதைதொடர்ந்து ‘எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்’ என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள். ஆனால், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 5 தொகுதிகளைதான் பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்.

நம்மிடம் பேசிய அறிவாலய புள்ளிகள், “கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஆரம்பத்தில் சொன்னது தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு.

பிறகு தலா 5 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்தோம். இதற்கு ஒப்புக் கொண்ட சி.பி.ஐ மார்ச் 18-ம் தேதி காலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 5 தொகுதிகளுக்கு கையெழுத்திட வாய்ப்பே கிடையாது. எங்களுக்கு கூடுதல் தொகுதி கொடுங்கள் என கடும் நெருக்கடி கொடுத்து வந்தார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்” என்றனர்.

ஸ்டாலின்

நம்மிடம் பேசிய சி.பி.எம் நிர்வாகிகள், “கூடுதல் தொகுதி இல்லாமல் ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இறுதி வரைக்கும் தி.மு.க ஒப்புக் கொள்ளவில்லை.

நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகும்கூட போனமுறை பெற்ற 6 தொகுதிகள் வேண்டுமானால் கிடைக்கும். இதற்குமேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்றுவிட்டனர். ஆகையால் தி.மு.க கொடுக்கும் 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ள சி.பி.ஐ மாநிலக் குழுவும் தயாராகிவிட்டது. நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை தராததால் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்கவுள்ளோம்” என்றனர்.

விரைவில் கூட்டணி இறுதி ஆகும் என்கிறார்கள் கூட்டணி வட்டாரத்தில்.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Vijay to field a Rajini fan in the Sekar Babu constituency? – What is the background?

TVK: A Beautiful Gift from Vijay Anna – Aadhav Arjuna | Vikatan Stage | Vikatan Medai | #3