அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது.
அதில் இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும், இதனால் இந்தியாவின் R&AW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவை, ‘கவலைக்குரிய நாடு’ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்…
“அமெரிக்காவின் USCIRF-ன் அறிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்தியாவை உள்நோக்கத்துடனும், பாரபட்சத்துடனும் சித்தரிப்பதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியலை வைத்து USCIRF இந்தியாவை ஒருதலைப்பட்சமாகவும், தவறாகவும் சித்தரித்து வருகிறது.
இப்படித் தொடர்ந்து தவறாகச் சித்தரிப்பது அந்த ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறி ஆக்குகிறது.
இந்தியாவை இப்படி விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த ஆணையம் அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் கவனம் செலுத்தலாம்.
மேலும், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் அச்சுறுத்தல்களில் தீவிர கவனம் செலுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.