நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்’ – குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’

கேரளாவைப் போன்று தேசிய கட்சிகள் பலமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. மத அடிப்படையிலான அரசியல் நிலவும் மாவட்டம். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என ஆறு சட்டசபை தொகுதிகள் குமரி மாவட்டத்தில் உள்ளன.

தற்போது கன்னியாகுமரி அ.தி.மு.க வசமும், நாகர்கோவில் பா.ஜ.க வசமும், பத்மநாபபுரம் தி.மு.க வசமும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி

முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனை, சர்வதேசச் சுற்றுலாத்தலம் என முக்கியப் பல அம்சங்களை உள்ளடக்கியது கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி. விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலா ஆகியவை பலரது வாழ்வாதாரமாக இருக்கின்றன.  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் உள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் மீண்டும் தளவாய்சுந்தரம் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி கடந்த தேர்தலைப்போன்று தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை போட்டியிட்ட ஆஸ்டின் இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

தாமரை பாரதி, ஒன்றிய செயலாளர் பாபு, வழக்கறிஞர் அணி சரவணன், இளைஞரணி அகஸ்தீசன் என பலரும் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதுகின்றனர்.

நா.த.க சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தொகுதியில், மீனவர்கள், இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்கள், வெள்ளாளர்கள், பட்டியலின மக்கள் பரவலாக இருக்கின்றனர். புதியதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு, மீனவர்கள் தரப்பில் வரவேற்பு காணப்படுகிறது. எனினும் மீனவ கிராமங்கள் தவிர்த்து இந்த ஆதரவு மற்ற சமூக மக்களிடம் பெரிய அளவில் இல்லாதது அவர்களுக்கு மைனஸ்.

காங்கிரஸுடனான கூட்டணி, தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதியில் பலம். அதேசமயம், அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க கூட்டணி பலமாக இருக்கிறது. எனவே இங்கு தற்போதைய நிலவரப்படி, தி.மு.க – அ.தி.மு.க இடையே போட்டி கடுமையாகவே நிலவுகிறது!

பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி இருக்கிறார். பா.ஜ.க-வில் இந்தமுறையும் எம்.ஆர்.காந்தி சீட் கேட்கிறார். அதே சமயம் பொன்.ராதாகிருஷ்ணனும் சீட்டுக்காக காய்நகர்த்துகிறார். டெல்லியில் நிதின் கட்கரி மூலம் சீட்டுக்கு முயன்றுவருகிறார்.

தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும் நாகர்கோவில் சிட்டிங் மேயர் மகேஷ் சமுதாய கோயில்களுக்கு சொந்த செலவில் கலையரங்கம் அமைத்துக்கொடுப்பது, தரைத்தளம் அமைப்பது என சொந்த பணத்தை வாரி இறைக்கத் தொடங்கிவிட்டார்.

முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கிச்சன் கேபினெட் மூலமும், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் கனிமொழி மூலமும் சீட்டுக்காக காய்நகர்த்தி வருகின்றனர்.

நா.த.க சார்பில் முத்துகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் தொகுதியில் இரண்டு கூட்டணி கட்சிகளும் அறிவிக்கும் வேட்பாளரைப் பொறுத்து கள நிலவரம் அமையும் என்பதே தற்போதைய நிலவரம்.

குளச்சல் சட்டமன்ற தொகுதி

குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரின்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக உள்ளார். மூன்றுமுறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருப்பதால் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. லாரன்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மீனவரணி நிர்வாகி மகேஷ் லாசர் என பலரும் சீட்டுக்காக முயல்கின்றனர்.

அ.தி.மு.க கூட்டணியில் கடந்தமுறைபோன்று பா.ஜ.க-வுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டால் கிழக்கு மாவட்ட பா.ஜ.க- தலைவர் கோபகுமார் அல்லது வழக்கறிஞர் சிவகுமாருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதே சமயம் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் இந்த தொகுதி வேண்டும் என தலைமையிடம் மல்லுக்கட்டிவருகிறார்.

நா.த.க சார்பில் ஆன்சி சோபா ராணி வேட்பாளராக களத்தில் உள்ளார்.

மீனவ சமூதாய வாக்குகளை விஜய் தரப்பும் கொஞ்சம் இழுத்தாலும், தற்போதய நிலையில் தி.மு.க கூட்டணி வலுவாக உள்ள தொகுதியாக குளச்சல் உள்ளது.

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

குமரியில் தி.மு.க வசம் உள்ள ஒரே தொகுதியான பத்மநாபபுரத்தில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக உள்ளார். மனோ தங்கராஜ் கனிமொழி ஆதரவாளர் என்பதால் அவர் மூலம் மீண்டும் சீட் கேட்கிறார். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், ஜெகநாதன் என பலரும் சீட்டுக்காக முயல்கின்றனர்.

இந்த தொகுதி அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயசுதர்சன் பெயர் பலமாக அடிபடுகிறது. நா.த.க சார்பில் சீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொகுதியில், இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், பட்டியல் சமூகத்தினர், மலைவாழ் மக்கள், நாயர் சமூகம், கிருஷ்ணவக சமூகம், இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள் நிறைந்திருக்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூக வாக்குகள், குறிப்பிட்ட சமூகம் சார்ந்த வாக்குகள் திரளாக இருப்பதால், தொகுதிக்குள் தி.மு.க முந்துகிறது!

மேயர் மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ்,

விளவங்கோடு தொகுதி

விளவங்கோடு தொகுதியில், இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், நாயர் சமூகம், ஈழவ சமூகத்தவர்கள் பரவலாக இருக்கின்றனர். தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ-வாக வென்ற விஜயதரணி 2024-ல் பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக உள்ளார். மீண்டும் அவர் சீட் கேட்கிறார். அதே சமயம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், கே.ஜி.ரமேஷ்குமார் போன்ற பல நிர்வாகிகள் சீட்டுக்காக முயல்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க சார்பில் விஜயதரணி களம் இறங்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அதே சமயம் ஜெயசீலன், தர்மராஜ் உள்ளிட்ட சீனியர்கள் சீட் கேட்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஸ்டெல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சூழலில், சிறுபான்மையினர் வாக்கு ஒருங்கே கிடைக்கும் சூழல் இருப்பதால், தொகுதியில் காங்கிரஸ் முந்துகிறது!.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் கடைசித் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் தொகுதி. விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவரான ராஜேஷ்குமார், கிள்ளியூர் தொகுதியில் தொடர்ச்சியாக வென்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். 

தொகுதியில், கிறிஸ்தவ மீனவர்கள், இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், நாயர் சமூக மக்கள் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்குத்தான் மீண்டும் சீட் என்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஜான்ஜேக்கப்பின் மகன் நிவின் சைமன் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

நா.த.க சார்பில் ஹிம்லர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் ஒருங்கே கிடைக்கும் என்பதால், காங்கிரஸ் கூட்டணிக்கு களம் சாதகமாக இருக்கிறது!

  • கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் காரணத்தால், திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

  • விஜய், மீனவ சமூதாய வாக்குகளை குறிவைக்கிறார்.

  • இருந்தாலும் நாகர்கோயில் தொகுதியை தவிர்த்து மற்ற 5 தொகுதியிலும் திமுக கூட்டணிக்கு சாதகமாக தான் களம் உள்ளது.

  • நாகர்கோயிலை பொறுத்தமட்டில், வேட்பாளர் தேர்வு முக்கிய பங்காற்றும். அதனை பொருத்து வெற்றி தோல்வியில் மாற்றங்கள் இருக்கும்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Why did Trump threaten NATO countries over the Hormuz Strait issue?

What is being told to the Iranian people about the war?