நெல்லையில் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்… திறப்பு விழாவுக்கு நயினாரையும் அழைக்கிறார்களாம்!

English

பாஜகவில் தனிமனித துதிகளுக்கு வேலை இருக்காது என்பார்கள். ஆனால், அதையும் தாண்டி அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கி இருக்கும் அவரது விசுவாசிகள், அதை தமிழகம் முழுவதும் கிளை பரப்பவும் தயாராகி வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பவர்கள் நடப்பு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லைச் சீமைக்காரர்கள் என்பது தான் பல்வேறு ஊகங்களை உலவவிட்டிருக்கிறது. அதிமுகவுடன் தாங்கள் மீண்டும் கூட்டணி அமைக்க சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காகவே அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கிய பாஜக தலைமை, அந்த இடத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரான நயினார் நாகேந்திரனை உட்கார வைத்தது. இதன் மூலம் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமர்க்களமாக அமைந்துவிட்டாலும்,

கட்சிக்குள் ‘அண்ணாமலை ஆர்மி’க்கும் நயினார் நலன் விரும்பிகளுக்குமான மோதல்கள் முன்னைவிட வேகமெடுத்தன. இதனால், அண்ணாமலையையும் நயினாரையும் பாஜக மேடைகளில் ஒருசேர பார்ப்பதே இப்போது அரிதாகி வருகிறது.


Tamil

நெல்லையில் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்… திறப்பு விழாவுக்கு நயினாரையும் அழைக்கிறார்களாம்!

பாஜகவில் தனிமனித துதிகளுக்கு வேலை இருக்காது என்பார்கள். ஆனால், அதையும் தாண்டி அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கி இருக்கும் அவரது விசுவாசிகள், அதை தமிழகம் முழுவதும் கிளை பரப்பவும் தயாராகி வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பவர்கள் நடப்பு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லைச் சீமைக்காரர்கள் என்பது தான் பல்வேறு ஊகங்களை உலவவிட்டிருக்கிறது.

அதிமுகவுடன் தாங்கள் மீண்டும் கூட்டணி அமைக்க சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காகவே அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கிய பாஜக தலைமை, அந்த இடத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரான நயினார் நாகேந்திரனை உட்கார வைத்தது. இதன் மூலம் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமர்க்களமாக அமைந்துவிட்டாலும், கட்சிக்குள் ‘அண்ணாமலை ஆர்மி’க்கும் நயினார் நலன் விரும்பிகளுக்குமான மோதல்கள் முன்னைவிட வேகமெடுத்தன. இதனால், அண்ணாமலையையும் நயினாரையும் பாஜக மேடைகளில் ஒருசேர பார்ப்பதே இப்போது அரிதாகி வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது

10 லட்சம் வாக்குகள்… பங்குபோட பல அணிகள்..! – இப்பவே கண்ணைக் கட்டும் புதுச்சேரி தேர்தல் களம்