தருமபுரி / மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், அணையில் இருந்து 35,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 32 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
Click the link above to read the full article on the original website.


