ஸ்டாலின், வைகோ, அன்புமணியை தொடர்ந்து சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்! | TN News Live

ஸ்டாலின், வைகோ, அன்புமணியை தொடர்ந்து சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் இல்லத்துக்கு சென்றார்.

அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலையில், தற்போது வைகோவை சந்திக்க அவரின் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். வீட்டுக்கு வந்த விஜய்யை, துரை வைகோ வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் சென்ற விஜய், வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதனை தொடர்ந்து விஜய் தற்போது பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

பாராட்டும் திருமா!

விசிக தலைவர் திருமாவளவன், “மேனாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேனாள் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜயஜ் அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.” என பதிவிட்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்
ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்

வைகோ இல்லத்தில் முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் இல்லத்துக்கு சென்றார்.

அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலையில், தற்போது வைகோவை சந்திக்க அவரின் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். வீட்டுக்கு வந்த விஜய்யை, துரை வைகோ வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் சென்ற விஜய், வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விஜய்க்கு உதயநிதி வழங்கிய `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகம்

ஸ்டாலினை சந்தித்த விஜய்..!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் இல்லத்துக்கு சென்றார்.

மதியத்திலிருந்து ஸ்டாலின் தங்கியிருக்கும் ஆள்வார்பேட்டை இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றனர். பின்னர் இருவரும் பொன்னாடை போர்த்தி பரஸ்பரம் நலம் விசாரித்தனர். முதல்வர் விஜய் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

17 அதிமுக எம்.எல்.ஏ-கள் சபாநாயகரிடம் மனு!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என 17 எம்.எல்.ஏ-கள் சபாநாயகரிடம் மனு வழங்கி இருக்கின்றனர்.

ஏற்கெனவே சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தரப்பில் சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக பிரிந்திருக்கும் நிலையில், தற்போது எடப்பாடிக்கு 17-எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்திருப்பது அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக பேசுபொருளாகியிருக்கிறது.

இதனால் அதிமுக வில் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என்ற பேச்சு அரசியல் களத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் இல்லத்துக்கு செல்கிறார்.

மதியத்திலிருந்து ஸ்டாலின் தங்கியிருக்கும் ஆள்வார்பேட்டை இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு!

சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிறைவு பெற்றது; அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் மட்டும் இன்று பதவியேற்கவில்லை.

நாளை காலை 9.30 மணிக்கு அவை மீண்டும் கூடி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் எனக் கூறி அவையின் இன்றைய அலுவல்கள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலினை சந்திக்கும் முதல்வர் விஜய்?

முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சான்றிதழை எடுத்து வர தவறிய அமைச்சர் கீர்த்தனா..!

தவெக சார்பில் நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற கீர்த்தனா, இன்று சட்டமன்றத்திற்கு வெற்றிச் சான்றிதழை எடுத்து வர தவறிவிட்டார். தலைமைச் செயலகம் வந்துவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். இதனால் அவர் எம்.எல்.ஏ வாக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் துணைமுதல்வரான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ – வாக பதவியேற்றி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவியேற்றனர். தவிர முன்னாள் அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

சட்டமன்றத்தில் எதிர் எதிரே விஜய் – உதயநிதி!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்: எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார்!

இரு அணியாக அதிமுக

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் தலைமைப் பதவிக்கு நிலவும் மோதலால் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 5 பேருடன் எடப்பாடி பழனிசாமி வருகைதந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய பிரிவை உருவாக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், பாதுகாப்பை பலப்படுத்துதல், பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 

முதல்வர் நாற்காலியில் விஜய்
முதல்வர் நாற்காலியில் விஜய்

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே11-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Meeting between Tamil Nadu Chief Minister Vijay and Stalin