தமிழ்நாடு அமைச்சரவை அழைப்பிற்கு ‘ஓகே’ சொன்ன IUML; இன்னும் யோசனையில் திருமா!| TN News Live

IUML ‘கான்பார்ம்’; யோசனையில் விசிக

தமிழக வெற்றிக் கழகம் விடுத்துள்ள அமைச்சரவை அழைப்பிற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ‘ஓகே’ என்று பச்சைக் கொடி காட்டியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் தங்களது முடிவை அறிவிக்கவில்லை.

விசிக தங்களது முடிவை அறிவித்ததும் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது வரை முதலமைச்சருடன் 33 அமைச்சர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். முஸ்லிம் லீக், விசிக சேர்ந்தால் 35 அமைச்சர்கள் ஆவார்கள்.

முஸ்லீம் லீக்கிற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும், விசிகவிற்கு ஆதி திராவிட நலத்துறையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன்
காதர் மொய்தீன், தொல்.திருமாவளவன்

யாருக்கு எந்த இலாகா?

இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முழு பட்டியல் இங்கே!

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

திருமா பிரசன்ட்

கடந்த 10-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை.

ஆனால், இன்று நடக்க உள்ள பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திருமா ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.

விசிகவிற்கும் அமைச்சரவையில் இடம் என்று தவெக தரப்பு கூறியிருந்தது. விசிக இன்னும் தங்களது முடிவை தெரிவிக்காததால், இன்று வெளியாகி உள்ள அமைச்சர்கள் பட்டியலில் விசிக இடம்பெறவில்லை.

விஜய் - திருமாவளவன்
விஜய் – திருமாவளவன்

ஆளுநர் மாளிகையில் விஜய்!

இன்று 23 அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.

விஜய்
விஜய்

‘தூத்துக்குடி ஶ்ரீநாத், அவினாசி கமலி’ அமைச்சர் விரிவாக்க பட்டியலில் யார் யார்? காங்கிரஸுக்கு இடம்!

தற்போது தமிழ்நாடு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலின் விவரம்…

இங்கே!

தமிழ்நாட்டில் அமைச்சரவை விரிவாக்கம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இன்று இந்த அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மொத்தம் 25 அமைச்சர்கள் இடம்பெற உள்ளனராம்.

இன்று புதிதாகப் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் காங்கிரஸ் (2) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (1) சேர்ந்த அமைச்சர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை அனைத்தையும் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த Live Blog உடன் இணைந்திருங்கள்.

விஜய் - திருமாவளவன் - ராகுல் காந்தி
விஜய் – திருமாவளவன் – ராகுல் காந்தி

மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

The earthquake that shook the party that day; Delhi pressure! – Background of Higher Education Minister Viswanathan

The value of the Indian Rupee will not be equal to Rs. 100 in 2026, but how far will it go?