“ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்” – மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடியின் பதிவு…

“அதிபர் ட்ரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் வாஷிங்டன் டி.சி. ஹோட்டலில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து காயமின்றித் தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்.

அவர்கள் எப்போதும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமே இல்லை… அத்தகைய செயல்கள் ஒருமனதாகக் கண்டிக்கப்பட வேண்டியவை” என்று பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்

நேற்று டின்னர் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆனால், திடீரென்று அங்கே துப்பாக்கிச் சூடு நடக்க, ட்ரம்ப், மெலானியா என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Operation Lotus: “Traitor” – Protesters wrote on Harbhajan Singh’s house wall

‘Number One for America’ – List of Countries with the Most Millionaires Released