ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்’ – என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது.

காட்பாடி தொகுதி

அதன் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் தி.மு.க-வில் மூத்த அமைச்சர் துரைமுருகன், அ.தி.மு.க-வில் வி.ராமு, நா.த.க-வில் திருக்குமரன், த.வெ.க-வில் டாக்டர் எம்.சுதாகர் போட்டியிடுகிறார்கள். தொகுதிக்குள் நாயுடு சமூகம் உட்பட தெலுங்குப் பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.

காட்பாடி
காட்பாடி

ராமு, சுதாகர் இருவரும் நாயுடு என்பதால், தெலுங்கு மக்களின் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. திருக்குமரன் குறித்த அறிமுகமே இன்னும் சென்றடையவில்லை. அதேசமயம், அரைநூற்றாண்டுகால மக்கள் பணியும், முதுமையிலும் `மீண்டும் எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று கேட்கும் மென்மையான தொனியும் அனுதாபத்தை ஏற்படுத்தியிருப்பதால், வெற்றியை நோக்கி நகர்கிறார் துரைமுருகன்.

அதேப் போல, திருப்போரூர் தொகுதியில் பா.ம.க வழக்கறிஞர் பாலு, ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கீழ்வைத்தினான்குப்பத்தில் பூவை ஜெகன்மூர்த்தி என தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது.

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை – வேலூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் முழு நிலவரம் அறிய க்ளிக் செய்யுங்கள்!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

J.V. Mega Survey: ‘Will Soumya Anbumani win?’ – What is the signal from border districts?

‘Fear only comes on full moon nights’: Problems faced by people living on the Girivalam path in Thiruvannamalai