`ஒன்று ஆளுங்கட்சியாக… இல்லை எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும்!’ – கிரிஷ் சோடங்கர்

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதற்கிடையில் கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என களம் சூடுபிடித்தது.

ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்தது.

TN Assembly Elections 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் நடந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. ஆட்சி அரியணையில் அமரப்போவது யார்? என மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “நாங்கள் உண்மையில் புத்துயிர் பெறும் நிலையில் இருக்கிறோம். கட்சி ஏற்கெனவே தனது அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டது.

நிச்சயமாக எங்கள் கட்சியும், தொண்டர்களும், உள்ளூர் தலைவர்களும், மத்திய தலைவர்களும் இப்போது தமிழ்நாடு மறுசீரமைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

திமுக - காங்கிரஸ்
ஸ்டாலின் – ராகுல் காந்தி

திமுக கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார். பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க பல கூட்டணிக் கட்சிகள் முதன்முறையாக ஒன்று சேர்ந்திருக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, முடிவுகளுக்காகக் காத்திருப்போம். ஆனால் இனிமேலும் எங்களால் ஒரு நடுநிலை சக்தியாக இருக்க முடியாது.

ஒன்று நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

EXIT POLL: ‘This is not just a guess!’ – Do you know how an ‘exit poll’ is conducted?

Iran US War: Is Chabahar Port a problem for India? Prof Bernard D Samy Interview | Hormuz