Politics 2 min read•November 22, 2026

Why is the Chief Minister still remaining silent on the Kallakurichi MLA issue? asks TTV Dhinakaran

Why is the Chief Minister still remaining silent on the Kallakurichi MLA issue? asks TTV Dhinakaran

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Why is the Chief Minister still remaining silent in the Kallakurichi MLA issue? AMMK general secretary TTV Dhinakaran has asked.

Regarding this, on his X account, he said: The judge who expressed regret at a public event about the Kallakurichi issue — why is the Chief Minister still remaining silent?

Comments made with regret at a public event by Madurai Bench of the High Court judge Victoria Gowri, stating that the state police have so far not taken appropriate action regarding the complaint that a TVK MLA sent an obscene text message to the Kallakurichi district collector, have been reported in the media.

If anyone raises questions against him, points out the failures of the inept government led by him, or offers fair criticism, Chief Minister Joseph Vijay immediately uses the police as an obedient arm of power and carries out arrests, like the hero in films who flies around attacking enemies. Then why is he, for weeks now, lying low like a coiled snake only in connection with such a serious allegation against a Member of the Legislative Assembly from his own party?

Shouldn’t the Chief Minister show the same speed in acting on complaints against members of the ruling party, and the same resolve that is shown in arresting those who criticize the government’s mistakes, in upholding the law? Is the administrative approach of the TVK government one law for those in power and another for the opposition and the public?

Will good governance blossom merely by proclaiming from platforms about women’s safety, law and order, and the independent functioning of the police? When the police, who are responsible for upholding the law, fail to take proper action in a complaint involving a woman officer, does the police’s approach change when the complaints are against those in power? Is the fundamental principle that everyone is equal before the law being followed here? If even a senior woman official in Tamil Nadu has no protection, what will become of the safety of ordinary women? People are raising these successive questions.

It was because of Chief Minister Joseph Vijay’s negligence in failing to take appropriate action on the complaint against the TVK MLA that the National Commission for Women itself has now taken suo motu cognizance of the incident and sought an explanation from the Tamil Nadu police. In this context, the fact that a judge has also raised questions at a public event further reinforces the need to bring out the facts regarding the complaint against the Kallakurichi TVK MLA and take appropriate legal action.

Therefore, considering the seriousness of this complaint against the TVK Kallakurichi MLA and the inaction of the police, I request that the court take up this matter suo motu and investigate it, he said.

AMMK General Secretary TTV Dhinakaran has questioned why the Chief Minister is still maintaining silence on the Kallakurichi MLA issue.

Tanglish

pkallakkurissi emelae vivakaaraththil innum etharkaaka maunam kaakkiraar muthalvar enru amamuka pothusseyalar titivi thinakaran kaelvi ezhuppiyullaar p pithukuriththu avar thanathu eks thalaththil kallakkurissi vivakaaram kuriththu pothunikazhssiyil varuththaththutan pathivitta neethipathi innum etharkaaka maunam kaakkiraar muthalvarp pkallakkurissi maavatta aatsiyarukku thaveka sattappaeravai uruppinar aapaasamaana kurunjseythi anuppiyathaaka ezhunthulla pukaar thotarpaaka maanilak kaavalthurai ithuvarai uriya natavatikkai etukkavillai ena uyarneethimanra mathuraik kilai neethipathi viktoeriyaa kauri pothunikazhssi onril varuththaththutan theriviththa karuththukal ootakangkalil veliyaakiyullanap

pthanakku ethiraakavoe thanathu thalaimaiyilaana tharkuriththanamaana arasin thoelvikalais suttikkaattiyoe niyaayamaana vimarsanangkalai munvaiththoe yaaraavathu kaelvi ezhuppinaal thiraippatangkalil paranthu paranthu ethirikalaith thaakkum kathaanaayakanaip poelak kaavalthuraiyai aeval thuraiyaakap payanpatuththi utanatiyaakak kaithu natavatikkaikalai maerkollum muthalvar joesap vijay thanathu sonthak katsiyais saerntha sattappaeravai uruppinar meethu ezhunthulla iththakaiya katumaiyaana kurrassaattu thotarpaaka mattum pala vaarangkalaakap pottip paampaaka atangkik kitappathu aenp

arasin thavarugalai vimarsippavargalaik kaidhu seivadhil kaattum adhe vegathaiyum, sattathai nilainaattuvadhil kaatta vendiya adhe urudhiyaiyum aalungatchiyai serndhavargal meedhaana pugaargalilum mudhalvar kaatta vendaama? aatchiyaalargalukku oru needhi, ethirkkatchiyinarukkum podhumakkalukkum oru needhi enbadhudhaan thaveka arasin nirvaaga anugumuraiyaa?

Pengalin paadhukaappu, sattam ozhungu, kaavalthuraiyin sudhandhiramaana seyalpaadu ena maedhaigalil muzhanguvathaal mattum nallaatchi malarndhuvidumaa? Sattathai paadhukaakka vaendiya poruppil irukkum kaavalthuraiyae, oru pen aatchiyar sambandhappattulla pugaaaril uriya nadavadikkai edukkaamal iruppathin moolam, aalungatchiyinar meethaana pugaargal endraal kaavalthuraiyin anugumurai maarividumaa? Sattathin mun anaivarum samam endra adippadaik kolgai ingae pinpatrappadugiradhaa? Tamilagathil pen uyaradhikaarikkae paadhukaappu illai endraal, saamaaniyap pengalukkaana paadhukaappu ennaagum? endra adukkadukkaana kaelvigalai makkal ezhuppugindranar.

Thaveka sattappēravai uruppinar meethana pukarukku uriya nadavadikkai edukkaamal iruntha mudhalvar Joseph Vijayyin alatchiyaththaalthaan theesiya makalir aanaiyame thaamaaga munvanthu ichchambavam kuriththu thamizhak kaavalthuraiyidam vilakkam kettulla nilaiyil, tharpothu neethipathi oruvarum pothunigalchchiyil kelvi ezhuppiyiruppathu, kallakkurichchi thaveka sattappēravai uruppinar meethana pukar kuriththa unmaikalai velikkondu vanthu, sattappadi uriya nadavadikkai edukka vendiyathan avasiyaththai melum valuppaduththukirathu.

Enave, Taveka Kallakurichi sattappēravai uruppinarkku ethiraga ezhundhulla inthap pugaarin theevraththaiyum, kaavalthuraiyin nadavadikkaiyinmaiyaiyum karuththil kondu, neethimandram ivvivagaaraththai thaamaaga munvandhu visaarikka vendum enak kettukkolgiren endru theriviththullaar.

AMMK General Secretary TTV Dhinakaran has questioned why the Chief Minister is still maintaining silence on the Kallakurichi MLA issue.

Pune: kalloori lift-il sikkikkonda maanavi 12 mani neraththirkup piragu meetpu!

Tamil

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பொதுநிகழ்ச்சியில் வருத்தத்துடன் பதிவிட்ட நீதிபதி – இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, மாநிலக் காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி பொதுநிகழ்ச்சி ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தனக்கு எதிராகவோ, தனது தலைமையிலான தற்குறித்தனமான அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியோ, நியாயமான விமர்சனங்களை முன்வைத்தோ யாராவது கேள்வி எழுப்பினால், திரைப்படங்களில் பறந்து பறந்து எதிரிகளைத் தாக்கும் கதாநாயகனைப் போலக் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தி, உடனடியாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மீது எழுந்துள்ள இத்தகைய கடுமையான குற்றச்சாட்டு தொடர்பாக மட்டும் பல வாரங்களாகப் பொட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது ஏன்?

அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில் காட்டும் அதே வேகத்தையும், சட்டத்தை நிலைநாட்டுவதில் காட்ட வேண்டிய அதே உறுதியையும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான புகார்களிலும் முதல்வர் காட்ட வேண்டாமா? ஆட்சியாளர்களுக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நீதி என்பதுதான் தவெக அரசின் நிர்வாக அணுகுமுறையா?

பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, காவல்துறையின் சுதந்திரமான செயல்பாடு என மேடைகளில் முழங்குவதால் மட்டும் நல்லாட்சி மலர்ந்துவிடுமா? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறையே, ஒரு பெண் ஆட்சியர் சம்பந்தப்பட்டுள்ள புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் காவல்துறையின் அணுகுமுறை மாறிவிடுமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கை இங்கே பின்பற்றப்படுகிறதா? தமிழகத்தில் பெண் உயரதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியப் பெண்களுக்கான பாதுகாப்பு என்னவாகும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.

தவெக சட்டப்பேரவை உறுப்பினர் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த முதல்வர் ஜோசப் விஜய்யின் அலட்சியத்தால்தான் தேசிய மகளிர் ஆணையமே தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து தமிழகக் காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தற்போது நீதிபதி ஒருவரும் பொதுநிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியிருப்பது, கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் மீதான புகார் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

எனவே, தவெக கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிராக எழுந்துள்ள இந்தப் புகாரின் தீவிரத்தையும், காவல்துறையின் நடவடிக்கையின்மையையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

AMMK General Secretary TTV Dhinakaran has questioned why the Chief Minister is still maintaining silence on the Kallakurichi MLA issue.