Culture 2 min read•October 25, 2026

“Tax relief for aviation fuel while people struggle for rice?” - Seeman condemns

“Tax relief for aviation fuel while people struggle for rice?” - Seeman condemns

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “When people are already struggling just to buy rice, why is the TVK government giving tax concessions on aviation fuel? Is this government and power for the people? Or for private capitalists?” asked Seeman, the chief coordinator of the Naam Tamilar Katchi.

In a statement he issued on this, he said, “At a time when poor, ordinary, and middle-class people are struggling to make ends meet every day due to the rising prices of essential commodities including rice, the Tamil Nadu government’s prioritizing of reducing tax on aviation fuel is highly condemnable.

Within 5 months of the TVK government coming to power, due to extremely poor administration, the prices of essential goods have multiplied, placing the people of Tamil Nadu under severe financial strain. In particular, the price of rice alone has risen by as much as 500 rupees per sack. From pulses to edible oils, the prices of everything have risen sharply, and people are suffering.

The incapable TVK government, instead of fixing all that, has reduced the tax on aviation fuel at Chennai airport from 29 percent to 16 percent, and the tax on certain flight services at other airports from 29 percent to 1 percent.

Chief Minister Vijay, who is showing such urgency to reduce the expenses of airlines, what steps has he taken to reduce the prices of essential goods that people use every day? TVK announced that Sannarak rice is being sold at Rs. 30 per kg in Amudham and cooperative stores.

However, people allege that rice of even poorer quality is being given in the name of low price. Why is the government, which should ensure that quality rice is available at a price working people can afford, being so indifferent in meeting their food needs?

Other than the Chief Minister’s change of coat-suit attire, what change has the TVK government brought about in Tamil Nadu? Has it reduced people to such a miserable state that they struggle even to buy rice? Or is the change that TVK functionaries themselves are committing sexual violence and selling drugs?

When people are struggling to buy rice, lentils, and oil, is reducing airfare the government’s primary task? If so, who is this government for? Who is this administration for? Is it for the millions who earn their living through daily labor? Or is it for private capitalists who run airlines with investments worth tens of thousands of crores?

The government says it is improving air transport, but shouldn’t it show the same concern in meeting people’s basic food needs? Economic growth is not about how many planes fly in Tamil Nadu in a day; it is about how many families in Tamil Nadu can eat good food three times a day without borrowing money.

Has the tax burden of airlines become greater than the hunger of the people for the TVK government? It is shameful that the government views food subsidies given to the people as an expense, while seeing tax concessions given to companies as an investment for growth. The government’s primary duty is to relieve people’s hunger and protect their purchasing power.

Therefore, I urge the Tamil Nadu government to swiftly take constructive action to control the rise in prices of essential commodities in order to protect the poor and ordinary people. Show the same concern in reducing the travel costs of those who fly in the sky as you do in reducing the food expenses of those who toil on the ground,” he said.

Tanglish

pstrongsennaistrong arisi vaangkavae makkal allalpatumpoethu thaveka arasu vimaana eriporulukku varissalukai alippathu aen intha aatsiyum athikaaramum makkalukkaanathaa allathu thaniyaar muthalaalikalukkaanathaa ena naam thamizhar katsiyin thalaimai orungkinaippaalar seemaan kaelvi ezhuppiyullaarp pithukuriththu avar veliyitta arikkaiyil arisi ullitta aththiyaavasiyap porutkalin vilaiyaerraththaal aezhai eliya natuththara makkal anraata vaazhkkaiyai nataththavae poeraatikkontirukkum nilaiyil vimaana eriporul meethaana variyaik kuraippatharku thamizhnaatu arasu munnurimai aliththiruppathu katum kantanaththirkuriyathu p

Thaveka arasu aatchikku vandha 5 maathangalil, miga mosamaana nirvaagathaal aththiyaavasiyap porutkalin vilai panmadangu uyarndhu Thamizhnaattu makkal kadumaiyaana nithichumaikku aalaagiyullanar. Kuriyaaga arisi vilai mattum moottaikku 500 roobai alavukku uyarndhulladhu. Paruppu mudhal ennai porutkal varai anaiththin vilaiyum kadumaiyaaga uyarndhu makkal allalpattu varugindranar.

Athaiyellaam sari seiya thiranatra thaveka arasu, Chennai vimana nilayaththil vimana eriporul meedhaana variyai 29 vizhukkaattilirundhu 16 vizhukkaadaagavum, pir vimana nilayangalil kurippitta vimana sevagalukkaana variyai 29 vizhukkaattilirundhu oru vizhukkaadaagavum kuraiththirukkiradhu.

pvimaana niruvanangkalin selavaik kuraikka ivvalavu vaekam kaattum muthalvar vijay makkal anraatam payanpatuththum aththiyaavasiyap porutkalin vilaiyai kuraikka enna natavatikkai etuththullaar amutham marrum kootturavu angkaatikalil sannaraka arisi kiloe roo30-kku virpanai seyyappatuvathaaka thaveka ariviththathup paanaal kuraintha vilai enrukoori sirithum tharamarra arisiyai tharuvathaaka makkal kurranjsaattukinranar uzhaikkum makkal vaangkum vilaiyil tharamaana arisi kitaippathai uruthiseyya vaentiya arasu avarkalin unavuth thaevaiyai niraivuseyvathil alatsiyamaay iruppathu aenp

Muthalvarin coat suit udai maatrathai thavira Thaveka arasaal Tamilnaattil nigazhnthulla maatramthaan enna? Arisi vaanguvatharkae makkal allalpadaum avalanilaikku aalaanatha? Allathu Thaveka nirvaagigalae paaliyal vankodumai seivathum, bothaipporul virpathumthaan maatramaa?

Arisi, paruppu, ennai vaanga mudiyamal makkal thavikkumpothu, vimaanap payanach selavaik kurappathuthaan arasin muthanmaiyaana paniyaa? Appadiyendraal indha arasu yaarukkaanathu? Indha aatchi yaarukkaanathu? Andraadam uzhaithu vaazhum kodikkanakkaana makkalukkaanatha? Pallayiram kodi muthaleettil vimaan niruvanangalai nadathum thaniyaar muthalaaligalukkaanatha?

Vimaanap pokkuvaraththai maembaduththuvathaakak koorum arasu, makkalin adippadai unavuth thevaiyai niraivuseyvatharkum athe akkaraiyai kaatta vendaamaa? Porulaathaara valarchchi enbathu Tamilnaattil oru naalaikku eththanai vimaanangal parakkindrana enbathil illai; Tamilnaattil eththanai kudumbangal kadan vaangaamal oru naalaikku moondru velaiyum nalla unavaruntha mudigirathu? enbathildhaan ullathu.

pmakkalin vayirruppasiyaivita vimaana niruvanangkalin varissumai perithaakivittathaa thaveka arasukku makkalukku vazhangkappatum unavu maaniyaththais selavaakavum niruvanangkalukku vazhangkappatum varissalukaiyai valarssikkaana muthaleetaakavum arasu paarppathu vetkakkaetaanathu makkalin pasiyaip poekkuvathum avarkalin vaangkum thiranaip paathukaappathumthaan arasin mutharkatamaip paakavae thamizhnaatu arasu aezhai eliya makkalai kaakka aththiyaavasiyap porutkalin vilaiyaerraththaik kattuppatuththa aakkappoorvamaana natavatikkaiyai virainthu etukka vaentumena valiyuruththukiraen vaanil parappavarkalin payanas selavaik kuraippathil kaattum akkaraiyai mannil uzhaippavarkalin unavus selavaik kuraippathilum kaattungkal enath theriviththullaarp

“Reels aatchikku vaakkalithavargale pulambugiraargal” - Thavega arasai saadiya Mu.Ka.Stalin

Makkalin vayitruppasiyai vida vimana niruvanangalin varichumai peridagivittatha Thaveka arasukku? Makkalukku vazhangappadum unavu maniyathai selavagavum, niruvanangalukku vazhangappadum varichalukaiyai valarchchikkana mudhalidagavum arasu parppathu vetkakkedanathu. Makkalin pasiyai pokkuvathum, avargalin vaangum thiranai paadhukappathumthaan arasin mudharkadamai.

Aagave, Tamilnadu arasu ezhai eliya makkalai kaakka, aththiyavasiyap porutkalin vilaiyettraththaik kattuppadutha aakkappoorvamaana nadavadikkaiyai virainthu edukka vendumenna valiyuruththugiren. Vaanil parappavargalin payanach selavaik kuraippathil kaattum akkaraiyai, mannil uzhaippavargalin unavuch selavaik kuraippathilum kaattungal” enath theriviththullaar. “Reels aatchikku vaakkaliththavargale pulambugiraargal” - Thaveka arasai saadiya Mu.Ka.Stalin

Tamil

சென்னை: “அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், விமான எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது.

விமான நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது.

ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்?

முதல்வரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா?

அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, விமானப் பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் விமான நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா?

விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விமானங்கள் பறக்கின்றன என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது.

மக்களின் வயிற்றுப்பசியைவிட விமான நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.