Culture 2 min read•October 31, 2026

Sister’s daughter’s wedding; Jagan rejects the Yelahanka palace; `I am not a lowly woman' – Sharmila’s anguish

Sister’s daughter’s wedding; Jagan rejects the Yelahanka palace; `I am not a lowly woman' – Sharmila’s anguish

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Andhra Pradesh Congress president and the sister of former Chief Minister Jagan Mohan Reddy, Y.S. Sharmila, has decided to change the wedding venue after Jagan refused to allow the use of family property for her daughter’s wedding. This incident has once again brought to light the ongoing property dispute and rift in the relationship between the two.

In this regard, Sharmila, who issued a strong statement on X, announced that her daughter Anjali Reddy’s wedding will no longer take place at the Yelahanka family property. “I am not a lowly person who grabs what does not belong to me,” she said, claiming that after Jagan Mohan Reddy became Chief Minister, the property was entirely allotted to her and her children as part of the division of the family assets. “This is the truth spoken in God’s name,” she asserted.

Jagan, Sharmila:

Explaining the emotional significance of the place, Sharmila said that her father, former Chief Minister Y.S. Rajasekhara Reddy (YSR), had stayed in that house many times, and that her daughter had grown up there. "Every Telugu household says that conducting a daughter’s wedding in one’s own home is a blessing for parents. But we are deeply saddened that we could not fulfill my daughter’s wish to have the house she grew up in serve as her wedding venue," she wrote in anguish.

Earlier, Jagan Mohan Reddy had refused to provide the Yelahanka palace for his niece’s wedding ceremony, citing security and privacy concerns. In a letter to Sharmila earlier this month, Jagan pointed out that the wedding event would bring a large number of guests, cooks, decorators, and other service providers into the residential complex.

"In the end, this is my home, and I want to ensure that my family and I are safe here," he had said. He also said that he was happy about his daughter-in-law's wedding, wished her a happy married life, and offered his Lotus Pond house in Hyderabad as an alternative venue.

Jagan Mohan Reddy

Sharmila's daughter Anjali Reddy is set to marry Dr. Somala Raghuram Reddy. Their wedding is scheduled for November 25, and the reception ceremony is planned to be held in Hyderabad on December 5.

This marriage venue dispute has once again brought into the spotlight the property issues said to be simmering between Sharmila and her brother, YSR Congress Party chief Jagan Mohan Reddy. The matter has also drawn political attention. Andhra Chief Minister Chandrababu Naidu’s criticism of the way Jagan treats his sister and mother has further intensified the political clash between the ruling Telugu Desam Party and the YSR Congress Party.

Tanglish

Aandhirap Pirathesak Kaankiris thalaivarum, munnaal mudhalvar Jekan Mogan Rettiyin sagothariyumaana Oi.S. Sharmila, thanathu magalin thirumanaththirkaaga kudumba soththai payanpadutha Jekan maruthathaiyaduthu, thirumana idaththai veru idaththirku maatra mudivu seithullaar. Indha sambavam, iruvarukkum idaiye nilavi varum soththuth thagaraaraiyum, uravu virisalaiyum meendum velichaththirkku kondu vanthullathu.

Idhu thodarbaaga X thalathil kaattamaana arikkai ondray veliyitta Sharmila, thanadhu magal Anjali Reddiyin thirumanam ini Elahanga kudumba choththil nadaiperadhu endru ariviththaar. "Enakkuch chondhamilladhadhai abagarikkum keezhththaramaanaval naan alla" endru kurippitta avar, Jagan Mohan Reddy mudhalamaichcharaanap piragu, kudumba choththup pirivinaiyin oru pagudhiyaaga andha choththu muttrilum thanakkum than pillaigalukkum oththukkappattadhu endru urimai koorinaar. "Idhu kadavulin peyaraal sollum unmai" endrum avar aaniththaramaaga theriviththaar.

Jegan, Sharmila:

Andha idathin unarvuppoorvamaana mukkiyathuvathai vilakkiya Sharmila, andha veettil thaan thanadhu thandhai, munnaal mudhalvar Oi.S. Rajasekara Reddy (YSR) palamurai thangiyirundhathaagavum, thanadhu magal anguthaan valarndhathaagavum koorinaar. "Ovvoru Telugu illamum sollum, sondha veettil magalin thirumanathai nadathuvadhu petrorukkuk kidaitha paakkiyam endru. Aanaal, thaan valarndha veede thanadhu thirumana medaiaaga amaiya vendum endra en magalin aasaiyai niraivetra mudiyamal ponadhil naangal migavum varundhugirom," endru vedhanaiyudan padhivittullaar.

munnaadhaaga, Jekan Mogan Retti paadhukaappu matrum thaniyurimaik kaaranangalai kaatti, thanadhu marumagalin thirumana vizhaavirkku Elahanka aranmanaiyai vazhanga maruththuvittaar. indha maadha thodakkaththil Sharmilaavukku ezhudhiyadhu kadidhaththil, thirumana nigazhvaal adhiga ennikkaiyilaana virundhinargal, samaiyalkaarargal, alangarippaalargal matrum matra sevai vazhangunargal kudiyiruppu valaagaththirkul varuvaargal endru Jekan suttikkaattinaar.

"Mudivil, idhu enadhu veedu, naanum enadhu kudumbathinarum ingup paadhugaappaaga iruppadhai urudhiseyya virumbugiren" endru avar kurippittirundhaar. Melum, thanadhu marumagalin thirumanathil magizhchi adaivadhaagavum, avar vaazhnaal muzhuvadhum magizhchiyaaga irukka vaazhthuvadhaagavum, maatru idamaaga Hyderabad-il ulla thanadhu Lotus Band veettai valanguvadhaagavum avar therivittirundhaar.

Jegan Mogan Reddy

Tamil

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம், இருவருக்கும் இடையே நிலவி வரும் சொத்துத் தகராறையும், உறவு விரிசலையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஷர்மிளா, தனது மகள் அஞ்சலி ரெட்டியின் திருமணம் இனி எலஹங்கா குடும்பச் சொத்தில் நடைபெறாது என்று அறிவித்தார். "எனக்குச் சொந்தமில்லாததை அபகரிக்கும் கீழ்த்தரமானவள் நான் அல்ல" என்று குறிப்பிட்ட அவர், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரான பிறகு, குடும்பச் சொத்துப் பிரிவினையின் ஒரு பகுதியாக அந்தச் சொத்து முற்றிலும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஒதுக்கப்பட்டது என்று உரிமை கோரினார். "இது கடவுளின் பெயரால் சொல்லும் உண்மை" என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஜெகன், ஷர்மிளா:

அந்த இடத்தின் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தை விளக்கிய ஷர்மிளா, அந்த வீட்டில் தான் தனது தந்தை, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி (YSR) பலமுறை தங்கியிருந்ததாகவும், தனது மகள் அங்குதான் வளர்ந்ததாகவும் கூறினார். "ஒவ்வொரு தெலுங்கு இல்லமும் சொல்லும், சொந்த வீட்டில் மகளின் திருமணத்தை நடத்துவது பெற்றோருக்குக் கிடைத்த பாக்கியம் என்று. ஆனால், தான் வளர்ந்த வீடே தனது திருமண மேடையாக அமைய வேண்டும் என்ற என் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்," என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டி பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் காரணங்களைக் காட்டி, தனது மருமகளின் திருமண விழாவிற்கு எலஹங்கா அரண்மனையை வழங்க மறுத்துவிட்டார். இந்த மாத தொடக்கத்தில் ஷர்மிளாவுக்கு எழுதிய கடிதத்தில், திருமண நிகழ்வால் அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்கள், சமையல்காரர்கள், அலங்கரிப்பாளர்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் வருவார்கள் என்று ஜெகன் சுட்டிக்காட்டினார்.

"முடிவில், இது எனது வீடு, நானும் எனது குடும்பத்தினரும் இங்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மருமகளின் திருமணத்தில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துவதாகவும், மாற்று இடமாக ஹைதராபாத்தில் உள்ள தனது லோட்டஸ் பாண்ட் இல்லத்தை வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஷர்மிளாவின் மகள் அஞ்சலி ரெட்டி, டாக்டர் சோமலா ரகுராம் ரெட்டியை மணக்க உள்ளார். இவர்களது திருமணம் நவம்பர் 25 ஆம் தேதியும், வரவேற்பு விழா டிசம்பர் 5 ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திருமண இட சர்ச்சை, ஷர்மிளாவுக்கும் அவரது சகோதரரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையே நிலவி வருவதாகக் கூறப்படும் சொத்துப் பிரச்சனைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் தனது சகோதரி மற்றும் தாயை நடத்தும் விதம் குறித்து விமர்சித்தது, ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.