Politics 3 min read•November 28, 2026

“People suffer due to the grounding of 1,500 government buses because of a shortage of tires” - Anbumani

“People suffer due to the grounding of 1,500 government buses because of a shortage of tires” - Anbumani

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “Since tyres have not been purchased for the government transport corporations in Tamil Nadu for the past two months, more than 1,500 buses have been kept off the road. Moreover, reports that buses are being operated with damaged tyres and are meeting with accidents are worrying. The negligence shown in operating buses meant for public use is condemnable,” said PMK leader Anbumani.

In a statement issued by him on this, he said, “In Tamil Nadu, there are a total of 8 transport corporations operating: the State Express Transport Corporation, the Metropolitan Transport Corporation, and 6 Tamil Nadu State Transport Corporations. These are divided into 26 regions in total, and 21,198 buses are being operated from the 317 depots belonging to them.

Since the already implemented Vidiyal Payanam scheme was upgraded and renamed the Vetri Payanam scheme, the losses incurred by the state transport corporations were not compensated. Due to the resulting financial crunch, spare parts were not purchased for the buses, affecting their operation. Even before that issue was resolved, a shortage of tyres has now led to more than 1,500 buses across the state being kept out of service, with 5 to 10 buses in each depot not being operated.

Since government buses are not being operated, the public, especially people in rural areas, has been severely affected. In places where 2 or 3 buses used to run to and from rural areas, one of those buses has been suspended. As a result, people are now unable to travel to urban areas even for urgent needs.

The very purpose of the free bus travel scheme for women introduced by the Tamil Nadu government was for rural women to travel to urban areas and earn a livelihood. With government buses lying idle, the Tamil Nadu government's objective itself has been affected.

On the other hand, buses operated with worn-out tires are frequently getting punctures and suffering accidents of various kinds, such as tire bursts that cause the driver to lose control and run off the road. The reason for this problem is that new tenders for tire procurement have not been called for the past 8 months, and as a result, tire manufacturers have refused to supply new tires.

Tenders are invited once every 6 months to procure tires for government transport corporations. Under this arrangement, companies that win the contract to supply tires are required to provide tires at the old price until the next tender is called.

Tenders for the purchase of tyres for government transport corporations were last invited in September last year. The contracts for supplying tyres to the companies that won those tenders expired in March this year. Even after that, the companies that had agreed to supply tyres at the prices fixed six months earlier continued to do so until September, but citing increased production costs, they have refused to supply tyres for the past two months.

The reason new tender calls for tire purchases have not been issued is the financial crisis prevailing in the transport corporations. It is because financial assistance, including the subsidy to be provided by the government, has not been released that the state transport corporations are languishing. If this situation is not corrected immediately, the condition of the transport corporations will worsen further.

The role of government buses in providing livelihoods to rural areas is significant. It is government buses that transport the human resources of rural areas, as well as all goods produced in rural areas, including agricultural produce, to the cities and help generate revenue.

Therefore, he has stated that the funds due to the state transport corporations should be released immediately, and that with those funds, tires should be purchased at once and steps should be taken to operate state buses safely without accidents for the benefit of the public.'

Tanglish

pstrongsennaistrong thamizhakaththilulla arasup poekkuvaraththuk kazhakangkalukku katantha iru maathangkalaaka tayarkal vaangkappataathathaal 1500 kkum kootuthalaana paerunthukal iyakkappataamal niruththi vaikkappattullana athumattuminri pazhuthaana tayarkalutan iyakkappatum paerunthukal vipaththukkullaavathaakavum veliyaakum seythikal kavalaiyalikkinrana makkal payanpaattukkaana paerunthukalai iyakkuvathil kaattappatum alatsiyam kantikkaththakkathaakum ena paamaka thalaivar anpumani theriviththullaarp

pithukuriththu avar veliyitta arikkaiyil thamizhakaththil arasu viraivup poekkuvaraththukkazhakam maanakarap poekkuvaraththuk kazhakam 6 thamizhnaatu arasu poekkuvaraththuk kazhakangkal ena moththam 8 poekkuvaraththuk kazhakangkal seyalpattu varukinrana ivai moththam 26 mantalangkalaaka pirikkappattu avarrukku sonthamaana 317 panimanaikalilirunthu 21198 paerunthukal iyakkappattu varukinrana p

Erkenave seyalpaduththappattu vandha Vidiyal Payana Thittam mempaduththappattu, vetrip payana thittamaaga maatrappattadhaal, arasu pookkuvaraththuk kazhagangalukku erpadum izhappu eedu seyyappadaadhadhaal, erpatta nidhi nerukkadi kaaranamaaga perundhukalukku uthiripaagangal vaangappadaadhadhan kaaranamaaga perundhugalin iyakkam baadhikkappattirundhadhu. Adhuve sariseyyappadaadha nilaiyil thaan tayargal patraakkurai kaaranamaaga ovvoru panimanaiyilum 5 mudhal 10 perundhugal veedham maanilam muzhuvadhum 1,500-kkum koodudhalaana perundhugal iyakkappadaamal niruththi vaikkappattullana.

Arasup perundhugal iyakkappadadhadhaal, podhumakkal, kurippaaga graamappura makkal, migak kadumaiyaaga baadhikkappattullanar. Graamap pagudhigalukku 2 alladhu 3 perundhugal sendru vandhaal, adhil oru perundhu niruththappattirukkiradhu. Adhanaal, makkal avasarath thevaigalukkaagak kooda nagarappagudhigalukku sella mudiyadha nilai uruvaagiyulladhu.

Tamilaga arasaal pengalukkaana ilavasap perundhu payanath thittam arimugappaduththappattadhan nokkame, graamappura pengal nagarppurangalukku sendru vaazhvaadhaaram eetta vendum enbadhudhaan. Arasup perundhugal mudangi kidappadhaal Tamilaga arasin nokkame baadhikkappattulladhu.

Innoru puram, pazhuthadaintha tayargalaik kondu iyakkappadum perundhugal adikkadi panchar aaguthal, tayar vediththu ottunarin kattuppattai izhandhu oduthal ena pala vagaiyana vippaththukalukku ullagindrana. Tayargal kolmudalukkaana puthiya tendargal kadantha 8 maathangalaaga korappadathathum, athanaal puthiya tayargalai vazhanga tayar thayarippu niruvanangal maruththu vittathum thaan indha sikkalukku kaaranamaagum.

Arasup pokkuvaraththuk kazhagangalukkaana tayargalai kolmudhal seiya 6 maathangalukku orumurai oppanthappulligal korappadum. Athan moolam tayar vazhanguvatharkaana oppantham petra niruvanangalukku, adutha oppanthappulli korappadum varai pazhaiya vilaiyil tayargalai vazhanga vendum endra nibandhanai vidhikkappadum.

parasup poekkuvaraththuk kazhakangkalukku tayar kolmuthal seyvatharkaana oppanthappullikal kataisiyaaka katantha aantu septampar maatham koerappattana athil verri perra niruvanangkal tayar vazhangkuvatharkaana oppantham katantha maars maathaththutan kaalaavathiyaaki vittathu athan pirakum septampar varai 6 maathangkalukku munpu oppukkonta vilaiyil tayarkalai vazhangkiya niruvanangkal urpaththis selavukal athikariththu vittathaakak koori katantha iru maathangkalaaka tayarkalai vazhangka maruththu vittanap

Tayarkal kolmutalukkaana puthiya oppanthap pullikal korappadathatharku kaaranam, pokkuvaraththuk kazhakangalil nilavum nithi nerukkadi thaan. Arasidamirunthu vazhangappada vendiya maaniyam ullitta nithi uthavikal vazhangappadathathaal thaan arasu pokkuvaraththuk kazhakangal mudangik kidakkindrana. Intha nilai udanadiyaaga sari seyyappadavittal, pokkuvaraththuk kazhakangalin nilai melum mosamaagividum.

Kiraamappurangalukku vaazhvathaaram vazhanguvathil arasup perunthugalin pangu kurippidaththakkathu. Avai thaan kiraamappurangalin manitha vaazhththaiyum, kiraamappurangalil urpaththi seyyappadum velaan vilai porulkal ullitta anaiththup porulkalaiyum nagarangalukku kondu sendru, varuvaai eetta uthavuvathu arasup perunthugal thaan.

Enave, arasup pokkuvarattuk kazhagangalukku vazhanga vendiya nidhiyaai udane vazhangavum, adhaik kondu udanadiyaaga tayargalai kolmudhal seydhu makkalukku payanalikkum vagaiyil arasup perundugalai vibhattindri iyakka nadavadikkai merkkolla vendum' enath theriviththullaar.

Tamil

சென்னை: ‘தமிழகத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரு மாதங்களாக டயர்கள் வாங்கப்படாததால், 1,500 க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. மக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகளை இயக்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாகும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் என மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு சொந்தமான 317 பணிமனைகளிலிருந்து 21,198 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வந்த விடியல் பயணத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டமாக மாற்றப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படாததால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்கப்படாததன் காரணமாக பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுவே சரிசெய்யப்படாத நிலையில் தான் டயர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் 5 முதல் 10 பேருந்துகள் வீதம் மாநிலம் முழுவதும் 1,500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளுக்கு 2 அல்லது 3 பேருந்துகள் சென்று வந்தால், அதில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், மக்கள் அவசரத் தேவைகளுக்காகக் கூட நகரப்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசால் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, கிராமப்புற பெண்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வாழ்வாதாரம் ஈட்ட வேண்டும் என்பதுதான். அரசுப் பேருந்துகள் முடங்கிக் கிடப்பதால் தமிழக அரசின் நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னொருபுறம், பழுதடைந்த டயர்களைக் கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பஞ்சர் ஆகுதல், டயர் வெடித்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதல் என பல வகையான விபத்துகளுக்கு உள்ளாகின்றன. டயர்கள் கொள்முதலுக்கான புதிய டெண்டர்கள் கடந்த 8 மாதங்களாக கோரப்படாததும், அதனால் புதிய டயர்களை வழங்க டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்து விட்டதும் தான் இந்த சிக்கலுக்கு காரணமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான டயர்களை கொள்முதல் செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். அதன் மூலம் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களுக்கு, அடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் வரை பழைய விலையில் டயர்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டயர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோரப்பட்டன. அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அதன் பிறகும் செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட விலையில் டயர்களை வழங்கிய நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டதாகக் கூறி, கடந்த இரு மாதங்களாக டயர்களை வழங்க மறுத்து விட்டன.

டயர்கள் கொள்முதலுக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாததற்கு காரணம், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடி தான். அரசிடமிருந்து வழங்கப்பட வேண்டிய மானியம் உள்ளிட்ட நிதி உதவிகள் வழங்கப்படாததால் தான் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலை உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் நிலை மேலும் மோசமாகிவிடும்.

கிராமப்புறங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் அரசுப் பேருந்துகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவை தான் கிராமப்புறங்களின் மனித வளத்தையும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் நகரங்களுக்கு கொண்டு சென்று, வருவாய் ஈட்ட உதவுவது அரசுப் பேருந்துகள் தான்.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்கவும், அதைக் கொண்டு உடனடியாக டயர்களை கொள்முதல் செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளை விபத்தின்றி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.