Cinema 2 min read•November 15, 2026

Mekedatu issue: EPS urges Chief Minister Vijay to pressure the Congress high command!

Mekedatu issue: EPS urges Chief Minister Vijay to pressure the Congress high command!

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

AIADMK general secretary Edappadi Palaniswami has urged that Chief Minister Vijay should press Congress leaders about the Mekedatu issue during his Delhi visit.

Regarding this, on his X page, he said that Karnataka Chief Minister DK Shivakumar has been repeatedly saying in government events and in public that 'No one's permission is needed to build a dam at Mekedatu' - 'Building a dam at Mekedatu is Karnataka's right' - 'It is our right to build a dam.' It is condemnable for a state chief minister to speak in this manner in a way that creates division between the people of Tamil Nadu and Karnataka.

To uphold Tamil Nadu’s rights in the Cauvery, MGR, Jayalalithaa, and later Amma’s government conducted several legal battles in the Supreme Court. As a result, after hearing arguments from all sides, the Supreme Court delivered its final verdict on the Cauvery issue. Accordingly, the Cauvery Management Authority and the Cauvery Water Regulation Committee were established, and the Karnataka government was directed to release the rightful share of water to Tamil Nadu from the Cauvery each month, along with the specified quantity.

• The Supreme Court’s November 1991 view that “interstate rivers are national property. No state can claim exclusive rights” has been reaffirmed in this verdict.

•After fully hearing the arguments of all the states, the Supreme Court has delivered a clear verdict that upstream states should not undertake any construction work without the consent of the downstream states.

The Karnataka Congress government does not respect the Supreme Court’s verdict, nor does it implement the order of the Cauvery Management Authority to release our rightful share of water in the Cauvery for the past six months. However, the Karnataka Chief Minister has recently been speaking in public as if he respects the law, saying that a dam at Mekedatu is necessary to release water to Tamil Nadu in accordance with the Supreme Court’s order.

At present, the only water reaching the Mettur dam is the flood surplus water that comes when all the dams in Karnataka are full and has no other route, along with rainwater that falls beyond the boundaries of Karnataka’s dams and along the Karnataka-Tamil Nadu border. As per the Supreme Court order, the Karnataka government does not release water to us from its dams every month. The Karnataka Congress Chief Minister is now repeatedly saying that a dam should be built across Mekedatu with the intention of stopping the rainwater and flood surplus water that currently flow to the Mettur dam.

Kaveri serves as the lifeline for the agricultural activities of the farmers in the delta districts, as well as the drinking water source for the people of 20 districts. In this situation, after the TVK government took office, it failed to argue for and secure Tamil Nadu’s rightful share of water in the Kaveri, and as a result, this year’s kuruvai cultivation and samba cultivation have been affected. If a dam is built at Mekedatu, the delta districts will turn into deserts, and the drinking water needs of the people in 20 districts will also become uncertain.

Chief Minister Vijay of the TVK-Congress coalition government, who is going to Delhi tomorrow, has told the leaders of the All India Congress, Sonia Gandhi, Rahul Gandhi, and Kharge, that the Karnataka Congress Chief Minister has been speaking publicly against Tamil Nadu, and has urged them to ensure compliance with the Supreme Court verdict and to pressure the Cauvery Management Authority to implement its periodic orders to release water into the Cauvery. He said, “I urge Chief Minister Joseph Vijay to do this.”

AIADMK General Secretary Edappadi Palaniswami has urged Chief Minister Vijay to raise the Mekedatu issue with Congress leaders during his visit to Delhi.

Tanglish

Thilli payanathil Kaangiras thalaivargalidam Megedaatu vivagaaram kurithu mudhalvar Vijay valiyuruththa vendum ena Adhimuka podhucheyalar Edappadi Palanisami valiyuruththiyullaar.

Idhukurithu avar thanadhu X thalathil, Karnataka mudhalvar Dike Sivakumar 'Megedaatuvil anai katta yaarudaiya anumadhiyum thevaiyillai' - 'Megedaatuvil anai kattuvadhu Karnatakaavin urimai', - 'Anai kattuvadhu engal urimai' endru thodarndhu arasu nigazhchigalilum, podhuveliyilum pesi varugiraar. Thamizhaga - Karnataka makkalidaiye oru vetrumaiyai undaakkum vidhamaga oru maanila mudhalvar ivvaru pesi varuvadhu kandikkaththakkadhu.

pkaaviriyil thamizh naattin urimaikalai nilainaatta emjiaar jeyalalithaa thotarnthu ammaavin arasu ussaneethimanraththil pala sattap poeraattangkalai nataththiyathu athan vilaivaaka anaiththuth tharappu vaathangkalaiyum kaettarintha ussaneethimanram kaaviri pirasnaiyil thanathu iruthith theerppinai vazhangkiyathu athanpati kaaviri maelaanmai aanaiyam marrum kaaviri neer ozhungkaarruk kuzhu amaikkappattu karnaataka arasu kaaviriyil irunthu ovvoru maathamum thamizh naattirku uriya pangku neerai thiranthuvitum alavaiyum veliyittathup p panmaanila nathikal thaesiya soththu entha oru maanilamum thani urimai koera iyalaathu enra navampar 1991-aam aantaiya ussa neethimanraththin karuththu iththeerppil meentum uruthi seyyappattullathup

•Uchchaneethimandram anaiththu maanilangalin vaathangalaiyum muzhumaiyaagak kaettarindha pinnar, keezhpadugai maanilangalin opputhal illaamal maelpadugai maanilangal evvithak kattumaana panigalaiyum maerkolla koodaadhu ena thelivaana oru theerppai vazhangiyulladhu.

Karnataka Kangaress arasu uchchaneethimandra theerppaiyum mathippathillai, Kaaveri Maelaanmai Aaniyam kadandha aaru maatha kaalamaaga Kaaveriyil namakkuriya pangu neerai thirandhuvidakkoorum uththaravaiyum nadaimuraippaduththuvathillai. Aanaal Karnataka mudhalvar sameepa kaalamaaga uchchaneethimandra uththaravinpadi Thamizhagaththirku thanni thirandhuvida Maekedaatthuvil anai avasiyam ena sattaththai mathippavar pol podhu veliyil paesivaraar.

Tharpothu Mettur anaikku Karnatak anaigal anaiththum nirambiyavudan veru vazhiyindri varum vella uparineerum, Karnatak anaigalin ellaigalai thaandi Karnatak-Tamilnadu ellaigalil peiyum mazhaineerumthaan varugirathu. Uchaneethimandra uththaravinpadi ovvoru maathamum Karnatak arasu namakku Karnatak anaigalil irundhu thanneer thirandhuviduvathillai. Tharpothu Mettur anaikku varum mazhaineeraiyum, vella uparineeraiyum thaduthu niruththa vendum endra ennathil Megedaatthuvin kurukke anai katta vendum endru thodarndhu Karnatak Congress mudhalvar tharpothu pesi varugirar.

Delta maavatta vivasaayigalin vivasaaya panigalukkum, 20 maavatta makkalin kudineer aathaaramaagavum Kaaviri thigalgirathu. Innilaiyil Thaveka arasu poruppetra vudan, Kaaviriyil Tamilagaththirkuriya panguneerai vaathaadi peraathathaal, intha aandu kuruvai saagupadi matrum samba saagupadi baathikkappattullathu. Innilaiyil Maekedaatthuvil anai kattinaal Delta maavattangal paalaivanamaavathudan, 20 maavatta makkalin kudineer thevaigalum kelvikkuriyathaagividum nilai yerpadum.

pnaalai thilli sellum thaveka - kaangkiras koottani arasin muthalvar vijay akila inthiya kaangkiras thalaivarkal soeniyaa kaanthi raakul kaanthi marrum kaarkae aakiyoeritam karnaataka kaangkiras muthalvar thamizhakaththirku ethiraaka pothu veliyil paesi varuvathai etuththukkoori ussaneethimanra theerppai pinparrumpatiyum kaaviri maelaanmai aanaiyam avvapoethu kaaviriyil thanneer thiranthuvitum uththaravukalai nataimuraipatuththa azhuththam tharavaentum enru muthalvar joesap vijayyai valiyuruththukiraen enru theriviththullaar p h2AIADMK General Secretary Edappadi Palaniswami has urged Chief Minister Vijay to raise the Mekedatu issue with Congress leaders during his visit to Delhih2

Kaangiras koottaniya? vivasaayigalin vaazhvaadhaaramaa?- mudhalvar Vijaykku DTV Dinakaran kelvi

Tamil

தில்லி பயணத்தில் காங்கிரஸ் தலைவர்களிடம் மேகேதாட்டு விவகாரம் குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் 'மேகேதாட்டுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' - 'மேகேதாட்டுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை', - 'அணை கட்டுவது எங்கள் உரிமை' என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார். தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதல்வர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்னையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

• பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது' என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

•உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகேதாட்டுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார்.

தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளை தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும்.

நாளை தில்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has urged Chief Minister Vijay to raise the Mekedatu issue with Congress leaders during his visit to Delhi.