Technology 3 min read•November 20, 2026

How is Grand Theft Auto VI? - A new leap in the gaming world!

How is Grand Theft Auto VI? - A new leap in the gaming world!

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

For the past 13 years, gaming enthusiasts around the world have eagerly awaited 'Grand Theft Auto VI' (GTA VI), and it has finally reached the screens of gamers’ home computers and PlayStation consoles. Built by Rockstar with a decade of work, thousands of employees, and a massive budget of one billion dollars, this virtual world contains astonishing details unlike anything we have seen before. 

Trying to play and review this game in a single day is like trying to roam around a huge city overnight and cram it into one article. This game, which is vast enough to hold such grandeur, includes countless experiences—from robbing banks, engaging in gunfights, and driving along the highway at dusk while listening to music, to working out at the gym, going shopping, and walking along the beach while eating ice cream. 

Generally, it is the 90s kids who truly understand the greatness of GTA games. The reason is that the 2002 release, ‘GTA Vice City,’ is something that got into the blood of everyone who grew up in the 90s and used computers. Even though the graphics were not very accurate, the satisfaction and fond memories that game gave them will never fade from their minds. Although later games like ‘GTA San Andreas,’ GTA 4, and GTA 5 also became popular, even today the ideal game for gaming fans is still Vice City. 

Generally, GTA is so multifaceted that it cannot be defined simply as a crime thriller game, a city-roaming simulator, or a car racing game. After GTA 5, which was released in 2013, this “GTA 6” has finally been released amid huge anticipation.

We see this grand 'Leonida' world entirely through the eyes of the main characters, Jason and Lucia. Jason, a former soldier, and Lucia, who has had the habit of stealing cars since she was 14, hope to start a peaceful life together. But, caught up in trouble through the company of the wrong people, they are forced to abandon the small life they have built and flee.

The city of Leonida is designed with unbelievable realism. There are many places, including nightclubs, shopping malls, shooting ranges, hunting spots, and fishing areas.

As we travel along the road, we may randomly come across a police chase of someone or interesting conversations among the public. There is an astonishing difference in graphics design between this game and the previously released ‘GTA 6’. 

Like regular GTA games, this also contains violence, but for the first time it includes many features not found in any of the previous games. The game rewards small good deeds such as sending selfies to your girlfriend, helping neighbors, and throwing trash into the bin. 

At the same time, every half hour it makes sure to prove that this is a game for those over 18. It is filled with boundary-pushing scenes such as nudity, drug use, the mansion of a porn producer, nightclubs, and bizarre television shows. 

Unlike previous games, women are not portrayed merely as objects of display; instead, all female characters, including Lucia, her mother, and the woman involved in drug smuggling, are given strong personalities. It is also a relief that this does not include the disgusting torture scenes seen in earlier games.

Fully justifying the 13-year wait, this ‘GTA 6’ has reached a new peak in the gaming world.

Tanglish

kadantha 13 aandugalaga ulagam muzhuvathumulla gaming priyargal perum aavaludan kaathiruntha 'Grand Theft Auto VI' (GTA VI) oru vazhiyaaga ovvoru gaming rasigargal veettu kanini / PlayStation thiraigalai thottuvittathu. Paththu aandu kaala uzhaippu, aayirakkanakkaana oozhiyargal matrum oru billion dollar brammaanda budget-il Rockstar niruvanam uruvaakkiyulla indha meynikar ulagam, naam idhuvarai kandiraatha attakaasamaana nunukkangalai kondirukkirathu.

Ore naalil indha game-ai vilaiyaadi vimarsippadhu enbadhu, oru miga periya nagarathai ore iravil sutri thirindhuvittu oru katturaiyil adakka muyarchippadharku samam. Andha alavukku brammaandangalai thaangi nirkum indha game-il vangigalai kollaiyadippadhu, thuppaakkich soodu nadaththuvadhu, andhi saayum nerathil nedunchaalaiyil isai kettapadi kaarai virattuvadhu thodangi, udarpayirchik koodathil udarpayirchi seivadhu, shopping selvadhu, kadarkaraiyil ice cream saappittapadiye nadappadhu varai ennatra anubavangalai game ulladakkiyulladhu.

Podhuvaaga Jidhaa Kemkalin arumaiyai unarndhavargal 90’s kidsgaley. Kaaranam 2002-aam aandu veliyaana ‘Jidhaa Vaais City’ kem enbadhu 90-kalil valarndhu, kanini payanpaduthiya anaivarukkum raththathil ooriya oru vishayam. Thulliyam kuraivaana graphics endraalum andha kem kodutha mananiraivum, pasumaiyaana ninaivugalum avargalin manadhil irundhu endrendrum agalaadhu. Adhan piragu vandha ‘Jidhaa Saan Aandras’, Jidhaa 4, Jidhaa 5 ullitta kemkalum pirabalamaanavai endraalum indrum gaming rasigargalin aadharsham andha Vaais Citydhaan.

Podhuvaaga GTA enbadhu oru crime thriller game-aa, alladhu nagarathai sutri thiriyum simulator-aa, car pandhaya vilaiyaattaa endru varaiyarukka mudiyaadha alavukku pala mugangalai kondadhu. 2013-l veliyana GTA 5-kkuppiragu tharpodhu migapperiya edhirpaarppudan oru vazhiyaaga veliyagiyulladhu indha ‘GTA 6’.

intha brammaandamaana 'Leonida' ulakaththai Jason matrum Lucia endra pradhaana kadhapaththirangalin kangal vazhiyaagave paarkkirom. munnaal raanuva veeraraana Jason, 14 vayathilirunthe kaargalai thirudum pazhakkamudaiya Lucia iruvarum inainthu oru nimmathiyaana vaazhkaiyai thodanga ninaikkiraargal. aanaal, thavaraana nabargalin sagavaasaththaal sikkalil maattikkondu, thaangal kattiyezhuppiya antha siriya vaazhkaiyai vittuvittu thappiyoda vendiya kattaayaththukku thallappadugiraargal.

Liyonida nagaram namba mudiyatha alavukkut thathroobamaaga vadivamaikkappattullathu. Iravu viduthigal, vaniga valaagangal, thuppaakki sudum thalangal, vettaiyaadum idangal, meenpidith thalangal enap pala idangal ullana.

Naam saalaiyil sellumbodhu, yaaro oruvarai police thurathuvathaiyo allathu pothumakkalin suvarasyamaana uraiyaadalgalaiyo edhechayaaga kaana neridum. Itharku munnal veliyaana ‘JitEA 6’-kkum indha kemukkum idaiyilaana graapiks vadivamaippil viyakka vaikkum alavukkaana viththiyaasam.

pvazhakkamaana jitiae kaemkalaip poela vanmurai ithilum irunthaalum muthanmuraiyaaka munthaiya kaemkal ethilum illaatha pala sirappamsangkal ithil itamperrullana kaathalikku selhpi anuppuvathu antai veettaarukku uthavuvathu kuppaikalai kuppaith thottiyil poetuvathu poenra sinna sinna nalla seyalkalukku kaemil vekumathikal kitaikkinrananbspp pathaesamayam ithu 18 vayathukku maerpattavarkalukkaana vilaiyaattu enpathai ovvoru arai mani naeraththukkum ithu niroopikkath thavaravillai nirvaanak kaatsikal poethaipporul payanpaatu aapaasap patath thayaarippaalarin maalikai iravu vituthikal marrum visiththiramaana tholaikkaatsi nikazhssikal ena ellai meeriya kaatsikal nirainthullananbspp

pmunthaiya kaemkalaip poela penkalai verum kaatsip porulaakas siththarikkaamal loosiyaa avarathu thaay poethaipporul kataththum pen ena anaiththup pen kathaapaaththirangkalukkum valuvaana aalumai vazhangkappattullathu munthaiya kaemkalil vanthathai poenra aruvarukkaththakka sithravathaik kaatsikalum ithil illaathathu aaruthal p p13 aantu kaala kaaththiruppukku muzhumaiyaana niyaayam saerththu kaeming ulakin puthiya ussaththaith thottullathu intha jitiae 6p figure classop-interactivefigure asidea hrefhttpswwwhindutamilinnewstechnologygta-6-video-game-from-the-rockstar-company-that-is-shaking-the-worldulakai ulukkum amerikka raakstaar niruvanaththin jitiae 6 veetiyoe kaemaaside

Munthaiya kaemkalai pola penkalai verum kaatchip porulaaga siththarikkaamal, Lusiya, avarathu thaai, bothaipporul kadaththum pen ena anaiththup pen kaththiraankalukkum valuvaana aalumai vazhangappattullathu. Munthaiya kaemkalil vanthathai pondra aruvurukkaththakka siththiravathaik kaatchikalum ithil illaathathu aaruthal.

13 aandu kaala kaathiruppukku muzhumaiyaana niyaayam serthu, gaming ulagin pudhiya uchchathai thottulladhu indha ‘JitA 6’.ulagai ulukkum amerikka Rockstar niruvanathin JitA 6 video game

Tamil

கடந்த 13 ஆண்டுகளாக உலகம் முழுவதுமுள்ள கேமிங் பிரியர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்த 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI' (GTA VI) ஒருவழியாக ஒவ்வொரு கேமிங் ரசிகர்கள் வீட்டு கணினி / ப்ளேஸ்டேஷன் திரைகளை தொட்டுவிட்டது. பத்து ஆண்டு கால உழைப்பு, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஒரு பில்லியன் டாலர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ராக்ஸ்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மெய்நிகர் உலகம், நாம் இதுவரை கண்டிராத அட்டகாசமான நுணுக்கங்களை கொண்டிருக்கிறது. 

ஒரே நாளில் இந்த கேமை விளையாடி விமர்சிப்பது என்பது, ஒரு மிகப் பெரிய நகரத்தை ஒரே இரவில் சுற்றித் திரிந்துவிட்டு ஒரு கட்டுரையில் அடக்க முயற்சிப்பதற்கு சமம். அந்த அளவுக்கு பிரம்மாண்டங்களை தாங்கி நிற்கும் இந்த கேமில் வங்கிகளைக் கொள்ளையடிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்துவது, அந்தி சாயும் நேரத்தில் நெடுஞ்சாலையில் இசை கேட்டபடி காரை விரட்டுவது தொடங்கி, உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வது, ஷாப்பிங் செல்வது, கடற்கரையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடியே நடப்பது வரை எண்ணற்ற அனுபவங்களை கேம் உள்ளடக்கியுள்ளது. 

பொதுவாக ஜிடிஏ கேம்களின் அருமையை உணர்ந்தவர்கள் 90’ஸ் கிட்ஸ்களே. காரணம் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ஜிடிஏ வைஸ் சிட்டி’ கேம் என்பது 90-களில் வளர்ந்து, கணினி பயன்படுத்திய அனைவருக்கும் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். துல்லியம் குறைவான கிராபிக்ஸ் என்றாலும் அந்த கேம் கொடுத்த மனநிறைவும், பசுமையான நினைவுகளும் அவர்களின் மனதில் இருந்து என்றென்றும் அகலாது. அதன் பிறகு வந்த ‘ஜிடிஏ சான் ஆண்ட்ரஸ்’, ஜிடிஏ 4, ஜிடிஏ 5 உள்ளிட்ட கேம்களும் பிரபலமானவை என்றாலும் இன்றும் கேமிங் ரசிகர்களின் ஆதர்சம் அந்த வைஸ் சிட்டிதான். 

பொதுவாக ஜிடிஏ என்பது ஒரு க்ரைம் த்ரில்லர் கேமா, அல்லது நகரத்தை சுற்றித் திரியும் சிமுலேட்டரா, கார் பந்தய விளையாட்டா என்று வரையறுக்க முடியாத அளவுக்கு பல முகங்களைக் கொண்டது. 2013-ல் வெளியான ஜிடிஏ 5-க்குப் பிறகு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஒருவழியாக வெளியாகியுள்ளது இந்த ‘ஜிடிஏ 6’.

இந்த பிரம்மாண்டமான 'லியோனிடா' உலகத்தை ஜேசன் மற்றும் லூசியா என்ற பிரதான கதாபாத்திரங்களின் கண்கள் வழியாகவே பார்க்கிறோம். முன்னாள் ராணுவ வீரரான ஜேசன், 14 வயதிலிருந்தே கார்களைத் திருடும் பழக்கமுடைய லூசியா இருவரும் இணைந்து ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறார்கள். ஆனால், தவறான நபர்களின் சகவாசத்தால் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தாங்கள் கட்டியெழுப்பிய அந்த சிறிய வாழ்க்கையை விட்டுவிட்டுத் தப்பியோட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

லியோனிடா நகரம் நம்ப முடியாத அளவுக்குத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு விடுதிகள், வணிக வளாகங்கள், துப்பாக்கி சுடும் தளங்கள், வேட்டையாடும் இடங்கள், மீன்பிடித் தளங்கள் எனப் பல இடங்கள் உள்ளன.

நாம் சாலையில் செல்லும்போது, யாரோ ஒருவரை போலீஸ் துரத்துவதையோ அல்லது பொதுமக்களின் சுவாரஸ்யமான உரையாடல்களையோ எதேச்சையாக காண நேரிடும். இதற்கு முன்னால் வெளியான ‘ஜிடிஏ 6’-க்கும் இந்த கேமுக்கும் இடையிலான கிராபிக்ஸ் வடிவமைப்பில் வியக்க வைக்கும் அளவுக்கான வித்தியாசம். 

வழக்கமான ஜிடிஏ கேம்களைப் போல வன்முறை இதிலும் இருந்தாலும், முதன்முறையாக முந்தைய கேம்கள் எதிலும் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. காதலிக்கு செல்ஃபி அனுப்புவது, அண்டை வீட்டாருக்கு உதவுவது, குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது போன்ற சின்ன சின்ன நல்ல செயல்களுக்கு கேமில் வெகுமதிகள் கிடைக்கின்றன. 

அதேசமயம், இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விளையாட்டு என்பதை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இது நிரூபிக்கத் தவறவில்லை. நிர்வாணக் காட்சிகள், போதைப்பொருள் பயன்பாடு, ஆபாசப் படத் தயாரிப்பாளரின் மாளிகை, இரவு விடுதிகள் மற்றும் விசித்திரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லை மீறிய காட்சிகள் நிறைந்துள்ளன. 

முந்தைய கேம்களைப் போல பெண்களை வெறும் காட்சிப் பொருளாகச் சித்தரிக்காமல், லூசியா, அவரது தாய், போதைப்பொருள் கடத்தும் பெண் என அனைத்துப் பெண் கதாபாத்திரங்களுக்கும் வலுவான ஆளுமை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கேம்களில் வந்ததை போன்ற அருவருக்கத்தக்க சித்ரவதைக் காட்சிகளும் இதில் இல்லாதது ஆறுதல்.

13 ஆண்டு கால காத்திருப்புக்கு முழுமையான நியாயம் சேர்த்து, கேமிங் உலகின் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது இந்த ‘ஜிடிஏ 6’.