Politics 2 min read•November 15, 2026

“End the Mekedatu issue through the Congress high command” - TTV Dhinakaran urges the Chief Minister

“End the Mekedatu issue through the Congress high command” - TTV Dhinakaran urges the Chief Minister

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “Tamil Nadu Chief Minister Vijay, who is going to Delhi, should politically exert the necessary pressure on the Karnataka Chief Minister through the Congress high command and put an end to the Mekedatu dam construction project,” said AMMK General Secretary TTV Dhinakaran.

In the statement he issued regarding this, “As the great Valluvar said, ‘If the ruler does not protect, the wealth of the land will diminish, and the learned will forget their learning,’ the Chief Minister, who should serve as the guardian protecting the livelihood of farmers, has instead, out of self-interest and for the sake of his governing power, failed in his duty and is completely destroying the livelihood of Tamil Nadu’s farmers. This is what has led Karnataka Chief Minister Shivakumar to remain adamant on the Mekedatu issue.”

At the event held in Mysuru, Karnataka, in the presence of Prime Minister Modi, the Karnataka Chief Minister’s statement that “no one can stop the construction of the Mekedatu dam across the Cauvery, and the Central Government must give final approval to the project” is not only unlawful but also deserving of strong condemnation.

Even though the Supreme Court has repeatedly made it clear in the Cauvery issue that no construction work can be undertaken unilaterally without the consent of the lower riparian states, Karnataka Chief Minister D.K. Shivakumar’s statement that they will build the Mekedatu dam and destroy the livelihoods of Cauvery delta farmers is the height of arrogance.

It is a curse that Tamil Nadu has ended up with a Chief Minister who is not even capable of issuing the slightest condemnation, while Karnataka Chief Minister D.K. Shivakumar continues to act in an increasingly brazen manner—meeting the Union Jal Shakti Minister, inviting him to visit the proposed site for the Mekedatu dam, and challenging that no one can stop the dam from being built.

In the vital issue of Tamil Nadu, Tamil Nadu Congress Committee president Manickam Tagore, who lacks the courage and strength to stop the Karnataka Chief Minister’s actions, which continue to operate illegally, is speaking grandly, saying, “We will not allow them to lay the bricks; they cannot apply cement,” which is a classic example of political buffoonery.

When Congress senior leader Rahul Gandhi had come to Chennai a few days ago, Tamil Nadu farmers had expected him to speak in detail about the Mekedatu dam issue, which is a livelihood concern for Tamil Nadu farmers. But instead of even making use of the opportunity to discuss such an important issue affecting farmers’ livelihoods, he wasted time at parties and cafés for Reels content, and now writing a letter to the Prime Minister asking that the Mekedatu dam be banned and shedding crocodile tears—how is that justified in any way?

“Therefore, now that reports have emerged that tomorrow Chief Minister Vijay will be going to Delhi for a book launch event with Congress party senior leader Sonia Gandhi, I would like to say at this time that if, at least this time, political pressure is properly exerted on the Karnataka Chief Minister through the Congress high command to put an end to the Mekedatu dam project, and if he lets this opportunity slip for the sake of his own ruling power, then it will amount to the biggest betrayal by Chief Minister Vijay against the farmers of Tamil Nadu,” said TTV Dhinakaran.

Tanglish

pstrongsennaistrong telli sellum thamizhaka muthalvar vijay kaangkiras maelitaththin moolamaaka karnaataka muthalvarukku arasiyal reethiyaaka uriya azhuththam kotuththu maekaethaattu anai kattum thittaththirku murruppulli vaikka vaentum ena amamuka pothusseyalaalar titivi thinakaran kooriyullaarp

pithu kuriththu avar veliyittulla arikkaiyil aapayan kunrum aruthozhiloer noolmarappar kaavalan kaavaan enin enra valluvap perunthakaiyin vaakkirkaerpa vivasaayikalin vaazhvaathaaraththaik kaakkum kaavalanaaka vilangka vaentiya muthalvar thanathu aatsi athikaaraththirkaaka suyanalaththoetu than katamaiyilirunthu thavari thamizhaka vivasaayikalin vaazhvaathaaraththai atiyoetu sithaiththu varuvathae karnaataka muthalvar sivakumaar maekaethaattu vivakaaraththil pitivaathamaaka iruppatharku kaaranamaaka amainthullathup

pkarnaataka maanilam maisooruvil nataiperra nikazhvil pirathamar moeti munnilaiyil kaaviriyin kurukkae maekaethaattu anai kattuvathai yaaraalum thatukka mutiyaathu enrum maththiya arasu aththittaththirku iruthi opputhal vazhangka vaentum enrum karnaataka muthalvar paesiyiruppathu sattaththirkup purampaanathu enpathoetu katumaiyaana kantanaththirkum uriyathaakump pkaaviri vivakaaraththil keezhp patukai maanilangkalin opputhalinri enthavoru kattumaanap panikalaiyum thannissaiyaaka maerkolla mutiyaathu enpathai ussa neethimanram palamurai thelivupatuththiyulla nilaiyilum maekaethaattu anaiyaik katti kaaviri teltaa vivasaayikalin vaazhvaathaaraththai azhiththae theeruvoem enra karnaataka maanila muthalvar tikaesivakkumaar paessu aanavaththin ussamp

Mathiya Jalsakthi amaicharai sandhippathu, Megedaatu anai katta udeshithulla idaththirku vandhu paarvaiyidumaru azhaippu viduppathu, anai kattuvathai yaaralum thadukka mudiyathu enach chaalvviduvathu ena aduththaduththa adaavadiththanamaaga seyalpattuk kondirukkum Karnataka maanaila mudhalvar D.K.Sivakumar kuraindhapatcham kandikkakkooda mudiyaatha alavirkkaana oru mudhalvar Tamilnattirkku kidaiththiruppathu saapakkedu.

Tamilagathin jeevatharap pirachchinaiyil sattathirkku purambaagath thodarnthu seyalpatuk kondirukkum Karnadaga maanaila mudhalvarin seyalpaadugalai thaduthu niruthuvatharkaana thunivoo, thiraaniyoo illaatha Tamilaga Congress katchiyin thalaivar Maanikkam Thaagoor, “sengallai vaikka vidamaattom; ciment poosa mudiyaathu” en veera vasanam pesik kondiruppathu arasiyalin akmark komaaliththanamaagum.

Kadantha sila naatkalukku munnar Chennai vanthiruntha Congress mootha thalaivar Rahul Gandhi, Tamilaga vivasaayigalin vaazhvaadhaara pirachchanaiyaana Mekedatu anai vivagaaram kurithu virivaaga pesuvaar ena Tamilaga vivasaayigal ethirpaarthiruntha nilaiyil, vivasaayigalin vaazhvaadhaaratthai paathikkum ivvalavu mukkiyamaana pirachchanai kurithu vivaathikkak kidaitha vaaippai kooda payanpaduththik kollamal, Reels Content-kkaaga virunthu, Café enap pozhuthai kazhiththu veenadiththuvittu, tharpothu Piramarkku Mekedatu anaikku thadaividikka vendum ena kaditham ezhuthi neelikkanneer vadippathu entha vagaiyil niyaayam?

Enave, naalai Congress katchiyin mooththa thalaivar Sonia Gandhi buthaga veliyittu nigazhvukkaaga mudhalvar Vijay Delhi sellaviruppadhaaga thagaval veliyagiyirukkum nilaiyil, indha muraiyaavadhu Congress melidathin moolamaaga Karnataka mudhalvarukku arasiyal reethiyaaga uriya azhuththam koduthu, Mekedatu anai kattum thittathirku mutruppulli vaippadhodu, tharpodhu kidaiththulla indha vaaippaiyum thanadhu aatchi adhikaarathirkaga thavaraviduvaareyaanaal, adhu Tamilaga vivasaayigalukku mudhalvar Vijay izhaikkum migapperiya dhrogamaagave amaiyum enbadhai inneraththil theriviththu kolgiren.” endru TTV Dhinakaran kooriyullaar.

Mettur aruge ‘Bawariya’ kumbal ooduruval: pothumakkalukku kaaval thurai echcharikkai

Tamil

சென்னை: “டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய் காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாக கர்நாடக முதல்வருக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுத்து, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவலனாக விளங்க வேண்டிய முதல்வர், தனது ஆட்சி அதிகாரத்திற்காக சுயநலத்தோடு தன் கடமையிலிருந்து தவறி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து வருவதே, கர்நாடக முதல்வர் சிவகுமார் மேகேதாட்டு விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மோடி முன்னிலையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு அத்திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்,” என்றும் கர்நாடக முதல்வர் பேசியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, கடுமையான கண்டனத்திற்கும் உரியதாகும்.

காவிரி விவகாரத்தில் கீழ்ப் படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும், மேகேதாட்டு அணையைக் கட்டி காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தே தீருவோம் என்ற கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு ஆணவத்தின் உச்சம்.

மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திப்பது, மேகேதாட்டு அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்திற்கு வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுப்பது, அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனச் சவால்விடுவது என அடுத்தடுத்து அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட முடியாத அளவிற்கான ஒரு முதல்வர் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது சாபக்கேடு.

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையில் சட்டத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக மாநில முதல்வரின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான துணிவோ, திராணியோ இல்லாத தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், “செங்கல்லை வைக்க விடமாட்டோம்; சிமெண்ட் பூச முடியாது” என வீர வசனம் பேசிக் கொண்டிருப்பது அரசியலின் அக்மார்க் கோமாளித்தனமாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இவ்வளவு முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கக் கிடைத்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல், Reels Content-க்காக விருந்து, Café எனப் பொழுதைக் கழித்து வீணடித்துவிட்டு, தற்போது பிரதமருக்கு மேகேதாட்டு அணைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கடிதம் எழுதி நீலிக்கண்ணீர் வடிப்பது எந்த வகையில் நியாயம்?

எனவே, நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு நிகழ்வுக்காக முதல்வர் விஜய் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த முறையாவது காங்கிரஸ் மேலிடத்தின் மூலமாகக் கர்நாடக முதல்வருக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுத்து, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பையும் தனது ஆட்சி அதிகாரத்திற்காகத் தவறவிடுவாரேயானால், அது தமிழக விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.