Culture 2 min read•October 11, 2026

"Call in your mercenaries if you want" - Rahul Gandhi tells Amit Shah the 'date'

"Call in your mercenaries if you want" - Rahul Gandhi tells Amit Shah the 'date'

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Students held a protest yesterday at Jantar Mantar in Delhi, demanding that Chief Election Commissioner Gyanesh Kumar resign.

Delhi police arrested the students who took part in the protest.

Protesting this, Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi posted on his X page as follows...

“Amit Shah’s Delhi Police has descended into hooliganism.

It is openly granting license and encouragement to the RSS-BJP’s real hired goons to unleash violence against women and youth.

As I have already said, the more Modi and his government resort to repression, the more the anger of Gen Z and students will erupt and intensify.

Students - Delhi protest

They will take to the streets...

On Monday, October 12, Congress, the entire INDIA alliance, and the youth of the country will once again take to the streets in large numbers.

This time too, that slogan will echo across the country louder than ever before.

Amit Shah, bring as much police force as you can—bring 10,000, 20,000, or 40,000.

Bring in as many BJP-RSS hired goons as you need.

We are not the ones who run away in fear. Nor are we the ones who retreat.

This struggle is not going to stop anymore!

What will we do?

On Monday, we will also meet the Chief Justice; when the Constitution is torn apart on the streets of Delhi and democracy is being crushed,

we will insist that the guardians of the law must not sit with their eyes closed.

Will we stand by silently and watch while the Constitution is being torn to pieces?

That will never happen. We will certainly call the responsible people to account!”

अमित शाह की दिल्ली पुलिस खुद तो गुंडागर्दी पर उतर ही आई - RSS-BJP के असली गुंडों को भी महिलाओं और युवाओं पर हिंसा करने की खुली छूट और बढ़ावा दे रही है।

जैसा मैंने कहा था, Mogambo Modi और उसकी सरकार जितना दबाएगी, Gen Z और छात्रों का गुस्सा उतना ही बढ़ेगा।

सोमवार, 12 अक्टूबर को… pic.twitter.com/UNAKSDwdxJ

— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2026

Tanglish

Thalaimai'th theerthal aanaiyar Gnanesh Kumar padhavi vilaga vendum endru Delhi Jantar Mantaril netru maanavargal porattam nadaththinar.

Porattathil eedupatta maanavargalai Delhi policeaar kaithu seithanar.

Itharku ethirpputh theriviththu makkalavai ethirkkatchi thalaivar Rahul Gandhi thanathu X pakkathil padhivittullathavathu...

“Amit Shahvin Delhi kaavalthurai rowdiththanathil irangiyullathu.

Pengal matrum ilainjargal meethu vanmuraiyai avizhththuvida RSS-BJP-yin unmaiyaana koolippadaiyinarukku athu pagirangamaaga urimamum ookkamum aliththu varugirathu.

Naan erkanave kooriyathupol, Modiyum avarathu arasum enthalavukku odukkumuraiyai kaiyaalumo, anthalavukku Gen Z matrum maanavargalin kobam vediththup perugum.

Maanavargal - Delhi porattam

Delhiyil kaithaanavargalai viduthalai seyyak koorum I.Naa manitha urimaigal aanaayam; Indiyaavin pathil enna?

Veethiyil iranguvaargal...

Aktobar 12 Thingalkizhamai anru, Congress, ottumotha ‘India’ koottani matrum naattin ilainjargal meendum latchakkanakkil veethiyil iranguvaargal.

Indha muraiyum, andha mulakkam mun eppodhum illadha alavukku urakka naadu muzhuvadhum ethirolikkum.

Amit Shaa ungalal mudindha alavu kaavalthuraiyai kootti vaarungal—10 aayiramoo, 20 aayiramoo, 40 aayiramoo kootti vaarungal.

Ungalukkuth thevaiyana eththanai BJP-RSS koolippadaiyinarai vendumaanalum azhaiththukkollungal.

Naangal bayandhu odubavargal alla. Pinvaangubavargalum alla.

Indhap porattam ini nirkappovadhu illai!

Enna seivom?

Thingal kizhamai anru, naangal thalaimai needhibathiyaiyum sandhippom; Delli veedhigalil arasiyalamaippuch sattam kizhithu eriyappadumbothum, jananayagam nasukkappadumbothum,

Tamil

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

“அமித் ஷாவின் டெல்லி காவல்துறை ரவுடித்தனத்தில் இறங்கியுள்ளது.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிட RSS-BJP-யின் உண்மையான கூலிப்படையினருக்கு அது பகிரங்கமாக உரிமமும் ஊக்கமும் அளித்து வருகிறது.

நான் ஏற்கனவே கூறியதுபோல், மோடியும் அவரது அரசும் எந்தளவுக்கு ஒடுக்குமுறையைக் கையாளுமோ, அந்தளவுக்கு Gen Z மற்றும் மாணவர்களின் கோபம் வெடித்துப் பெருகும்.

மாணவர்கள் - டெல்லி போராட்டம்

வீதியில் இறங்குவார்கள்...

அக்டோபர் 12 திங்கள்கிழமை அன்று, காங்கிரஸ், ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணி மற்றும் நாட்டின் இளைஞர்கள் மீண்டும் லட்சக்கணக்கில் வீதியில் இறங்குவார்கள்.

இந்த முறையும், அந்த முழக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உரக்க நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

அமித் ஷா உங்களால் முடிந்த அளவு காவல்துறையைக் கூட்டி வாருங்கள்—10 ஆயிரமோ, 20 ஆயிரமோ, 40 ஆயிரமோ கூட்டி வாருங்கள்.

உங்களுக்குத் தேவையான எத்தனை BJP-RSS கூலிப்படையினரை வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் பயந்து ஓடுபவர்கள் அல்ல. பின்வாங்குபவர்களும் அல்ல.

இந்தப் போராட்டம் இனி நிற்கப்போவது இல்லை!

என்ன செய்வோம்?

திங்கள்கிழமை அன்று, நாங்கள் தலைமை நீதிபதியையும் சந்திப்போம்; டெல்லி வீதிகளில் அரசியலமைப்புச் சட்டம் கிழித்து எறியப்படும்போதும், ஜனநாயகம் நசுக்கப்படும்போதும்,

சட்டத்தின் பாதுகாவலர்கள் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்துவோம்.

அரசியலமைப்புச் சட்டம் துண்டு துண்டாகக் கிழிக்கப்படும்போது நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்போமா?

அது ஒருபோதும் நடக்காது. பொறுப்பானவர்களை நாங்கள் தட்டிக்கேட்டே தீருவோம்!”

अमित शाह की दिल्ली पुलिस खुद तो गुंडागर्दी पर उतर ही आई - RSS-BJP के असली गुंडों को भी महिलाओं और युवाओं पर हिंसा करने की खुली छूट और बढ़ावा दे रही है।

जैसा मैंने कहा था, Mogambo Modi और उसकी सरकार जितना दबाएगी, Gen Z और छात्रों का गुस्सा उतना ही बढ़ेगा।

सोमवार, 12 अक्टूबर को… pic.twitter.com/UNAKSDwdxJ

— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2026