Culture 2 min read•November 5, 2026

Bodies of 5 Chennai fishermen recovered in Andhra coastal waters; search for 4 others intensifies

Bodies of 5 Chennai fishermen recovered in Andhra coastal waters; search for 4 others intensifies

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: Chief Minister Vijay, who has expressed condolences over the disappearance of the fishermen who went out to sea for fishing from the Chennai fishing harbor and were recovered as bodies in the Andhra sea area after their boat engine broke down, has ordered financial assistance for their families.

In a statement issued by Chief Minister Vijay regarding this, “On October 29, from the Chennai fishing harbour, nine fishermen — K. Pakkirisamy alias Surya (49), M. Kuppan (48), S. Mohan (47), K. Rajesh (52), A. Murugan (48), L. Kuppusamy (58), C. Vijayakanth (44), A. Aravind (40), and M. Narayanan (57) — who had gone to sea in a mechanized boat for fishing, were safely sheltered at the Nizampatnam fishing harbour in Andhra Pradesh due to the cyclone and weather warning issued by the Tamil Nadu Department of Fisheries and Fishermen Welfare.

In this situation, on the night of November 2, it was reported that the boat had headed toward Ramayapatinam port and that its engine had failed in the middle of the sea; this was conveyed on the early morning of November 3 via wireless communication by the fishermen on the missing boat to the fishermen on another mechanized boat.

In this situation, since no communication was received from the missing boat and no information was known about their whereabouts, the Tamil Nadu Fisheries and Fishermen Welfare Department was instructed to carry out search operations using Chennai fishing harbor fishing boats, Andhra Pradesh state fishing boats, and Indian Coast Guard vessels, and to coordinate with Andhra Pradesh state authorities and the families of the missing fishermen to ascertain the condition of the missing fishermen. 

At this time, I was deeply saddened and distressed to learn the tragic news that the bodies of fishermen Mohan, Murugan, and Vijayakanth had been recovered and identified on the coast of Gothapatnam in Prakasam district of Andhra state.

Furthermore, I have instructed that the process of identifying the two recovered bodies and the search for the remaining missing fishermen be expedited.

I extend my deepest condolences and sympathies to the families and relatives grieving the fishermen who lost their lives in this incident, and I have ordered that relief assistance of Rs. 7 lakh each be provided to their families, with Rs. 2 lakh each to be given immediately, and that arrangements be made to bring their bodies to Tamil Nadu at government expense and hand them over to their families,” he said.

Tanglish

Chennai: Chennai meenpidith thuraimugaththil irundhu kadalukku meenpidikkach sendru padagu iyandhiram pazhudadaindhu aandhirap kadarpagudhiyil sadalamaaga meetkappatta meenavargal maraivukku irangal theriviththulla mudhalvar Vijay, avargaladhu kudumbaththinarukku nidhiyudhavi ariviththu uththaravittullaar.

Idhu kuriththu mudhalvar Vijay veliyaittulla arikkaiyil, “Chennai meenpidith thurai mugaththil irundhu kadandha Akktoobar 29 anru visaippadagil, meenpidikkak kadalukku senra Kaa.Pakkirisami (e) Sooryaa (49), Ma.Kuppan (48), Se.Mohan (47), Kaa.Rajesh (52), Aa.Murugan (48), Laa.Kuppusami (58), Si.Vijayakaanth (44), A.Aravindh (40), Mu.Naarayanan (57) aagiya 9 meenavargal Thamizhaga meenvalam matrum meenavar nalath thuraiyaal vazhangappatta puyal matrum vaanilai munnecharikkaiyinaal, Andhira maanilam, Nijaampattinam meenpidith thurai mugaththil paadhukaappaaga irundhanar.

Innilaiyil, November 2 anru iravu, antap padagu Ramayapattinam thuraimugaththai nokkich senrathagavum, nadukkadalil iyandhiram seyalizhandhathagavum, kaanamal pona padagil irundha meenavargalaal wireless thodarbu moolam matroru visipadagil irundha meenavargalukku November 3 anru adhikaalai therivikkappattadhu.

Innilaiyil, kaanamal pona padagil irundhu evvidha thagaval thodarbum kidaikka peraadhaathaalum, avargalathu iruppidam kuriththa evvidha thagavalum theriyaadhaathaalum, Chennai meenpidith thuraimuga meenpidip padagugal, Aandhra maanila meenpidip padagugal matrum Indiyak kadalor kaaval padaik kappalgal moolam theduthal nadavadikkaigalai merkollumaarum, kaanamal pona meenavargalin nilaiyai ariya, Aandhra maanila adhigaarigal matrum kaanamal pona meenavargalin kudumbangaludan orunginaindhu seyalpadumaarum Thamizhaga meenvalam matrum meenavar nalathurai arivuruththappattadhu.

Indha nilaiyil, Andhra maanilam, Prakasam maavattathil ulla Kothapatinam kadalorathil Mohan, Murugan, Vijayakanth aagiya meenavargal sadalangalaaga meetkappattu adaiyaalam kaanappattullanar endra thuyaramaana seithiyai arinthu miguntha varuththamum, vedhanaiyum adaindhen.

Melum, meetkappattulla irandu sadalangalai adaiyaalam kaanum paniyinaiyum, kaanamal pona enjiya meenavargalai thedum paniyinaiyum viraivupaduththumaaru uththaravittullen.

indhach sambavaththil uyirizhandha meenavargalai izhandhuvaadum avargaladhu kudumbaththinarukkum, uravinargalukkum enadhu aazhndha irangalaiyum, aarudhalaiyum theriviththuk kolvadhodu, avargaladhu kudumbaththinarukkuth thalaa roo.7 latcham nivaarana nidhi vazhangidavum, adhil thalaa roo. 2 latcham udanadiyaaga vazhangidavum, avargaladhu udalgalai arasu selavil thamizhagaththukku kondu vandhu avargaladhu kudumbaththinaridam oppadaikka nadavadikkai merkollavum uththaravittullen” endru theriviththullaar.

Tamil

சென்னை: சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு இயந்திரம் பழுதடைந்து ஆந்திரப் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29 அன்று விசைப்படகில், மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற கா.பக்கிரிசாமி (எ) சூர்யா (49), ம.குப்பன் (48), சே.மோகன் (47), கா.ராஜேஷ் (52), ஆ.முருகன் (48), லா.குப்புசாமி (58), சி.விஜயகாந்த் (44), அ.அரவிந்த் (40), மு.நாராயணன் (57) ஆகிய 9 மீனவர்கள் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையினால், ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 2 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் இயந்திரம் செயலிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு நவம்பர் 3 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன படகில் இருந்து எவ்வித தகவல் தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களது இருப்பிடம் குறித்த எவ்வித தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகுகள், ஆந்திர மாநில மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திர மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதபட்டினம் கடலோரத்தில் மோகன், முருகன், விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியினையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியினையும் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா ரூ. 2 லட்சம் உடனடியாக வழங்கிடவும், அவர்களது உடல்களை அரசு செலவில் தமிழகத்துக்கு கொண்டு வந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.