Culture 2 min read•November 3, 2026

“Amid Shah’s false propaganda about 30 million infiltrators” - Manickam Tagore

“Amid Shah’s false propaganda about 30 million infiltrators” - Manickam Tagore

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “Is Union Home Minister Amit Shah ready to explain to the nation since when these ‘3 crore infiltrators’ he mentions have been living in India? Is this 3 crore infiltration your Himalayan administrative failure, or is it an outright false story fabricated out of fear of an impending election defeat?” asked Tamil Nadu Congress president Manickam Tagore.

In a statement issued on this, he said, “The false propaganda being spread by Union Home Minister Amit Shah that ‘3 crore infiltrators’ have been removed from the voter list has been exposed. Nearly 10 crore voters were subjected to intensive scrutiny, and according to official data provided by the Chief Electoral Officers of various states, the number of suspected foreigners identified was only 1,600.

By blatantly concealing this official truth from the Election Commission, Amit Shah’s outrageous slander that 3 crore people are infiltrators is a direct attack on Indian democracy.

Is the Home Minister prepared to explain to the nation since when these “3 crore infiltrators” mentioned by Amit Shah have been living in India, and in which elections they have been voting? If they had voted in elections held before the SIR process, I raise the fundamental question of whether the results of the 2014, 2019, and 2024 general elections, and the Modi-led Union governments formed through those elections, are lawful.

Since 2014, the BJP has been in power at the Centre; since 2019, Amit Shah, as Home Minister, and the ruling BJP-led Union government must bear full responsibility for the country’s border security and internal security. Have you been sitting on the throne of power for more than ten years, merely watching the country’s borders and electoral systems as if it were a spectacle?

Is this claim of 3 crore infiltrators your Himalayan administrative failure, or an outright false story fabricated out of fear of an impending election defeat?

In fact, in the official replies obtained under the Right to Information Act, the Chief Electoral Officers of the states examined—Karnataka, Jharkhand, Meghalaya, Kerala, Goa, and Mizoram—have confirmed that only 1,600 people are “suspected foreigners.”

The BJP leadership has been thrown off balance by the sea of hundreds of thousands of people who gathered at the INDIA alliance rally held on November 1. Unable to figure out what to say in response to this massive popular upsurge for social justice and democracy, Amit Shah is hurling such poisonous lies solely to divert people’s attention.

Instead of trying to distract people with empty rhetoric, Home Minister Amit Shah should answer these legitimate questions raised by the opposition parties and the public,” he said.

Tanglish

Chennai: “Ultthurai amaichar Amit Shah kurippidum indha ‘3 kodi ooduruvalkarargal’ eppothirundhu Indiavil vasikkirargal enbadhai avar naattukku vilakka thayaara? Indha 3 kodi ooduruvul enbadhu ungalsudaiya Himalaya nirvaagath tholviyaa alladhu varavirukkum theerthal tholvi bayathil punaiyappadum appattamana poik kadhaiyaa?’ en Tamilaga Congress thalaivar Manickam Thakur kelvi ezhuppiyullaar.

Idhu kurithu avar veliiyitta arikkaiyil, “vaakkalar pattiyalil ‘3 kodi ooduruvalkarargal’ neekkappattulladhaaga onriya ulthurai amaichar Amitsha koorivarum poip pracharam ambalamaagiyulladhu. Eraththaal 10 kodi vaakkalargal theevira thanaikkaikku udpaduththappattu, palveru maanilangalin thalaimai therdhal adhigaarigal alitha uththiyogapoorva tharavugalinpadi kandarriyappatta sandhegaththirkuriya velinaattinarin ennikkai verum 1,600 mattume.

Therdhal aanaiyaththin indha adhigaarappoorva unmaiyai appattamaaga maraiththuvittu, 3 kodi per ooduruvalkarargal endru Amit Sha kattavizhththuvittulla abandamaana avathooru India jananayagaththin meedhaana neradi thaakkuthalaagum.

Amith Shaa kurippidum indha ‘3 kodi ooduruvalkarargal’ eppothirundhu Indiyavil vasikkirargal, endha theerthalkalilirundhu vaakkalithu varugirargal enbadhai ulthurai amaichar naattukku vilakka thayara? Oruvelai ivargal SIR nadaimuraikku munbirundha theerthalkalil vaakkalithirundhaal, kadandha 2014, 2019 matrum 2024 aagiya podhu theerthalkalin mudivugalum, andha theerthalkal moolam amaindha Modi thalaimayilaana onriya arasugalum sattapoorvamaanavaithaana endra adippadai kelviyai ezhuppugiren.

2014 mudhal mathiyil paajagathaan aatchiyil irukkirathu; 2019 mudhal naattin ellaip paadhugaappirkum ulnaattup paadhugaappukkum ulthurai amaicharaaga amit shaavum, aalum onriya paajaga arasarumthaan muzhumudhar poruppetka vendum. Paththaandukalukkum melaga aatchik kattilil amarndhukondu naattin ellaigalaiyum therthal kattamaippugalaiyum vedikkai paarthuk kondirundheergalaa?

Indha 3 kodi ooduruvall enbadhu ungaladhu imaalaya nirvaagath tholviyaa alladhu varavirukkum therthal tholvi bayathil punaiyappadum appattamaana poik kadhaiyaa?

punmaiyil thakaval ariyum urimais sattaththin keezh perappatta athikaarappoorva pathilkalil karnaatakaa jaarkkant maekaalayaa kaeralaa koevaa misoeram ena aayvu seyyappatta maanilangkalin thalaimaith thaerthal athikaarikal uruthippatuththiyiruppathu verum 1600 paer mattumae santhaekaththirkuriya velinaattinar enpathuthaanp pnavampar 1 anru nataiperra intiyaa koottanip paeraniyil thiranta latsakkanakkaana makkalin perungkatalaik kantu paajaka thalaimai nilaikulainthu poeyirukkirathu makkalin intha maaperum samookaneethi marrum jananaayaka ezhussikku enna pathil solvathenru theriyaamal thinarippoey makkalin kavanaththaith thisaithiruppuvatharkaakavae iththakaiya nassup poykalai amith shaaa alli veesi varukiraar p

Verum vaaychchavadaal pesi madaimaatrap paarkkaamal, ethirkkatchigalum makkalum ezhuppum indha niyaayamaana kelvigalukku ulthurai amaichchar Amit Shah pathil solla vendum” enath theriviththullaar.

“Idaitherthal varum thoguthigalukku mattume mudhalvar nalathittangal vazhangugiraar” - Palaniswami vimarsanam

Tamil

சென்னை: “உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள் என்பதை அவர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா?’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு, 3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? ஒருவேளை இவர்கள் எஸ்ஐஆர் நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன்.

2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?

இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா?

உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே 'சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்' என்பதுதான்.

நவம்பர் 1 அன்று நடைபெற்ற இண்டியா கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார்.

வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.