English
The Anaimangalam copper plates, taken from India to the Netherlands in the 18th century, are coming back here. From yesterday until the 20th, Indian Prime Minister Modi is on a five-nation tour. As part of this, Modi is currently in the Netherlands. In connection with Modi's visit, the Netherlands has agreed to return the 11th-century Anaimangalam copper plates of India to India. These plates date back to the reign of Rajaraja Chola I. The plates record the land revenue and taxes from Nagapattinam to the Buddha monastery.
In the 18th century, a Dutch officer took these relics through a Christian missionary. Now, they are coming back to India again during Modi's visit.
Tanglish
18-m nootrandil Indiyavil irundhu Netherlandirkku kondu sellappatta Anaimangalam sepputh thakadugal meendum ingae vara ullana. Nettrilirundhu varugira 20-m thethi varai, aindhu naattup payanangalil irukkirar Indhiya Prathamar Modi. Adhil oru pagudhiyaaga, tharpothu Netherlandil irukkirar Modi. Modiyin payanathaiyotti, 11-m nootrandai serntha Indhiyaavin Anaimangalam sepputh thakadugalai Indhiyaavirkku kodukka Netherlandhu oppukkondulladhu. Netherlandil Modi idhu mudhalam Raaja Raaja Sozhan kaalathu thakadugal aagum. Indha thakadugalil Nagapattinatthil irundhu puttha madalayaththirku vandha nila varumanam matrum vari aghiyavatrai patri idamperrulladhu.
18-m nootrandil Kiristhava mishanari moolam Dutch adhikaari oruvar indhat thakadugalai kondu senrullaar. Tharpothu idhu meendum Modiyin payanathaiyotti India varugiradhu.
Tamil
18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் மீண்டும் இங்கே வர உள்ளன.
நேற்றிலிருந்து வருகிற 20-ம் தேதி வரை, ஐந்து நாட்டுப் பயணங்களில் இருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
அதில் ஒரு பகுதியாக, தற்போது நெதர்லாந்தில் இருக்கிறார் மோடி.
மோடியின் பயணத்தையொட்டி, 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்தியாவின் ஆனைமங்கலம் செப்புத் தகடுகளை இந்தியாவிற்கு கொடுக்க நெதர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

இது முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்து தகடுகள் ஆகும். இந்தத் தகடுகளில் நாகப்பட்டினத்தில் இருந்து புத்த மடாலயத்திற்கு வந்த நில வருமானம் மற்றும் வரி ஆகியவற்றை பற்றி இடம்பெற்றுள்ளது.
18-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிஷனரி மூலம் டச் அதிகாரி ஒருவர் இந்தத் தகடுகளை கொண்டு சென்றுள்ளார்.
தற்போது இது மீண்டும் மோடியின் பயணத்தையொட்டி இந்தியா வருகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.