English
The Governor has called for Vijay, the leader of the party, to be sworn in as Chief Minister. Tomorrow, at a grand event to be held at Nehru Stadium, Vijay is set to take oath as Chief Minister. In this context, S.A. Chandrasekhar, Vijay's father, who is going to be Chief Minister, spoke emotionally about his son. After meeting the Governor and returning home, S.A. Chandrasekhar told English media, "I am immensely happy beyond measure. Everything I have done in my life has been only for my son. In the end, the people of Tamil Nadu have fought and won through Vijay. Vijay will do everything for the Tamil people," he said tearfully and emotionally.
His father's role was crucial in moving Vijay from cinema towards politics. He was the one who formed fan clubs for Vijay, transformed them into a people's movement, and laid the foundation for Vijay's entry into politics.
Tanglish
Thavega thalaivar Vijayyai mudalvaraga pathaviyaerka kori aalanar azhaippu viduthirukkirar. Naalai Nehru Stadiumil pramaandamaaga nadakkum vizhaavil Vijay mudalvaraga pathaviyaerka virukkirar. SAC innilaiyil, mudalvaraga pogum Vijayyin thandaiyana S.A.Chandrashekar than magan kurithu unarvuppoorvamaaga pesiyirukkirar. Vijay aalanarai sandhithuvittu veedu thirumbiya piragu aangila oodagathinaridam pesiya S.A.Chandrashekar, 'Enakku alavida mudiyadha alavukku perum magizhchiyaga irukkiradhu. En vaazhnalil naan seythavai ellaam en maganukkaaga mattume. Kadaisiyil, Tamilaga makkal Vijay vazhiyaaga poradi venrirukkindrana. Vijay Tamil makkalukkaaga ellaavatraiyum seivaar' ena kangalanga negizhvaaga kooriyirundhaar.
SACvijayyai sinimaa vazhi arasiyalai nokki nagarththi senrathil avarin thandhaiyin pangu mukkiyamanadhu. Avardhaan Vijaykkena rasikar manrangalai uruvaakki athai makkal iyakkamaaga maatri Vijayyin arasiyal nuzhaivukku adikolinarr.
Tamil
தவெக தலைவர் விஜய்யை முதல்வராக பதவியேற்க கோரி ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். நாளை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கும் விழாவில் விஜய் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.

இந்நிலையில், முதல்வராகப் போகும் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகன் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.
விஜய் ஆளுநரை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு ஆங்கில ஊடகத்தினரிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘எனக்கு அளவிட முடியாத அளவுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்நாளில் நான் செய்தவை எல்லாம் என் மகனுக்காக மட்டுமே. கடைசியில், தமிழக மக்கள் விஜய் வழியாக போராடி வென்றிருக்கின்றனர். விஜய் தமிழ் மக்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்’ என கண்கலங்க நெகிழ்வாக கூறியிருந்தார்.

விஜய்யை சினிமா வழி அரசியலை நோக்கி நகர்த்தி சென்றதில் அவரின் தந்தையின் பங்கு முக்கியமானது. அவர்தான் விஜய்க்கென ரசிகர் மன்றங்களை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றி விஜய்யின் அரசியல் நுழைவுக்கு அடிகோலினார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.