English
Due to Israel’s ongoing attacks on Lebanon, the Middle Eastern country, the recently reached peace agreement between the United States and Iran has been pushed to the brink of collapse. Iran has officially accused the United States of violating the peace agreement because the attacks on Lebanon continue. In response, the Iranian military has dramatically announced that it will once again close the 'Strait of Hormuz,' a highly important route in global crude oil transportation.

The United States and Iran recently signed a historic memorandum of understanding aimed at ending the war that had lasted for more than three months. Even after this peace agreement was reached, the Strait of Hormuz continues to remain in an unstable state of “closing and opening.” As a result, an unusual and tense atmosphere continues to prevail across the entire Middle East region.
Tanglish
Maththiya kizhakku naadaana Lebanon meethu Israel thodarndhu nadaththi varum thaakkuthalgal kaaranamaaga, America matrum Iran idaiye sameebaththil ettappatta amaithi oppantham muriyum nilaikku thallappattulladhu. Lebanon meethaan thaakkuthal thodarvathaal, amaithi oppanthathai America meerivittadhaaga Iran adhikaarappoorvamaaga kurram saattiyulladhu. Idhan ethiroliyaaga, ulagaalaviya kacha enney pokkuvaraththil miga mukkiyap paadhaiyaaga thigazhum 'Hormuz neerinaiyai' meendum mooduvadhaaga Iran raanuvam adhiradiyaaga ariviththulladhu.

Amerikkaavum Iraanum moondru maathangalukkum melaaga needitha porai mudivukkuk konduvarum nokkil anmaiyil oru varalatruch sirappumikka purindhunarvu oppandhathil kaiyezhuthittana. Indha amaithi oppandham erpatta pinnarum, Haarmus neerinaiyaanadhu 'mooduvadhum thirappadhumaaga' oru nilaiyatra thanmaiyileye needithu varugiradhu. Idhanaal madhya kizhakku praanthiyam muzhuvadhum oruvitha asaadhaarana matrum pathattamaana soozhal thodarndhu nilavi varugiradhu.
Tamil
மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதல் தொடர்வதால், அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகத் திகழும் ‘ஹார்முஸ் நீரிணையை’ மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அண்மையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும், ஹார்முஸ் நீரிணையானது ‘மூடுவதும் திறப்பதுமாக’ ஒரு நிலையற்ற தன்மையிலேயே நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒருவித அசாதாரண மற்றும் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.


