English
TASMAC management has warned that strict action will be taken against employees who collect Rs.10 more than the fixed price for liquor bottles at TASMAC shops.
TASMAC management had already ordered that no extra amount should be collected for liquor bottles. It had also warned that disciplinary action would be taken against employees who violate this order.
In this situation, there were repeated complaints that an additional Rs. 10 per bottle was being collected at TASMAC shops in various parts of Tamil Nadu. Based on the inspections conducted in response, TASMAC management has stated that 200 employees have been suspended in just the past 20 days.

It has also warned once again that if it is confirmed that extra money is being collected for liquor bottles, strict action will be taken against those responsible, whoever they may be.
Tanglish
Taasmaak kadaigalil madhuvaan paattilgalukku nirnayikkappatta vilaiyai vida Ru.10 kooduthalaaga vasoolikkum oozhiyargal meethu kadum nadavadikkai edukkapadum ena Taasmaak nirvaagam echchariththulladhu.
Madhuvaan paattilgalukku kooduthal thogai vasoolikka koodaadhu endru erkanave Taasmaak nirvaagam uththaravittirundhadhu. Indha uththaravai meeri seyalpadum paniyaalargal meethu olungu nadavadikkai edukkapadum endrum echcharikkappattirundhadhu.
Innilaiyil, தமிழகத்தின் palveru paguthigalil ulla Tasmac kadaigalil paatilukku ரூ.10 kooduthalaga vasoolikkappaduvathaaga thodarndhu pugaargal vandhana. Idhaiyடுத்து nadaththappatta aayvugalin adippadaiyil, kadandha 20 naatkalil mattum 200 paniyaalargal paniyidai neekkam (suspend) seiyyappattulladhaaga Tasmac nirvaagam theriviththulladhu.

Melum, madhuppaan paatilgalukku kooduthal thogai vasoolippadhu urudhi seiyyappattaal sambandhappattavargal yaaraaga irundhaalum kadumaiyaana nadavadikkai edukkapadum endrum Tasmac nirvaagam meendum echchariththulladhu.
Tamil
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்று ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 200 பணியாளர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

