English
In the third match of the Women’s T20 World Cup, Australia defeated South Africa by 65 runs to secure a commanding victory.
In this match, which began in Manchester, Australia won the toss and chose to bat. The opening batters were dismissed cheaply.
Number 3 batter Phoebe Litchfield played aggressively, crossed fifty, and was then dismissed. Ellyse Perry scored 36, and Georgia Wareham made 32 runs. Australia posted 172/8 in 20 overs.
South Africa, in reply, were all out for 107 in 16.4 overs. Laura Wolvaardt top-scored with 44 runs.
For Australia, Georgia Wareham took 3 wickets, while Molineux and Alana King took 2 wickets each.
Georgia Wareham, who excelled with both batting and bowling, won the Player of the Match award. Australia will face Bangladesh in their next match on June 17.
ICC Women's T20 World Cup 2026 Australia Women won by 65 runs
Tanglish
மகளிர் டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மான்செஸ்டரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
நம். 3 வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். எலீஸ் பெர்ரி 36, ஜார்ஜியா வேர்ஹாம் 32 ரன்கள் குவித்தார்கள். 20 ஓவர்களில் ஆஸி. 172/8 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 16.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 44 ரன்கள் எடுத்தார்.
Aasi. saarbil Jaargiyaa Verhaam 3 vikkettugalum Moliniks, Alaanaa King thalaa 2 vikkettugalai eduththaargal.
Paetting, panthuveechu ena asaththiya Jaargiyaa Verhaam aatta naayagi virudhu vendraar. Aasi. aduththa pottiyil Vangadesaththudan Joon 17aam thedhi modhugiradhu.
ICC Women's T20 World Cup 2026 Australia Women won by 65 runs
Tamil
மகளிர் டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மான்செஸ்டரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
நம். 3 வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். எலீஸ் பெர்ரி 36, ஜார்ஜியா வேர்ஹாம் 32 ரன்கள் குவித்தார்கள். 20 ஓவர்களில் ஆஸி. 172/8 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 16.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 44 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்டுகளும் மொலினிக்ஸ், அலானா கிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய ஜார்ஜியா வேர்ஹாம் ஆட்ட நாயகி விருது வென்றார். ஆஸி. அடுத்த போட்டியில் வங்கதேசத்துடன் ஜூன் 17ஆம் தேதி மோதுகிறது.
ICC Women’s T20 World Cup 2026 Australia Women won by 65 runs
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.