English
A complaint has been filed at the Chintadripet police station that hard disks are missing from the Electricity Board headquarters on Chennai’s Anna Salai.
It is said that those hard disks contained everything from coal procurement to tenders and confidential documents.
Nearly 18 hard disks are missing.
It is reported that this theft took place on May 16 and 17.

This incident is being investigated from the angle that only those who knew information about the electricity board headquarters could have been involved in this theft.
Although the hard disks have gone missing, it is said that their paper documents are safe.
While there is the shock of the hard disks being missing on one hand, this has also raised questions about administrative security.
Tanglish
Chennai Annaa Saalaiyil ulla Minvaariyat Thalaimaiyagaththil Haardu Diskkugal Kaanavillai endru Sindhaathirippettai Kaaval Nilaiyaththil Pugaaralikkappattulladhu.
Andha Haardu Diskugalil Nilakkari Kolmuthal Mudhal Tendar, Ragasiyam Aavணangal Varai Iruppadhaaga Koorappadugiradhu.
Kittaththatta 18 Haardu Diskkugal Kaanavillai.
Indha Thiruttu Kadandha Mei 16, 17-m Thedhigalil Nadandhadhaaga Therivikkindranar.

Minvaariyat Thalaimaiyamam Kurittha Thagaval Therindhavargal Thaan Indha Thiruttil Eedupattirukka Mudiyum Enra Konaththil Indha Sambavam Vichaarikkappadugiradhu.
Haardu Diskugal Kaanamal Ponaalum, Avatrudaiya Paper Aavணangal Paththiramaaga Iruppadhaaga Koorappadugiradhu.
Haardu Diskugal Kaanavillai Enra Adhirchi Oru Pுறam Irunthaalum, Idhu Nirvaagap Paadhugaappu Kurittha Kelviyaiyum Ezhuppiyulladhu.
Tamil
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல் முதல் டெண்டர், ரகசிய ஆவணங்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை.
இந்தத் திருட்டு கடந்த மே 16, 17-ம் தேதிகளில் நடந்ததாக தெரிவிக்கின்றனர்.

மின்வாரியத் தலைமையகம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும் என்கிற கோணத்தில் இந்தச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனாலும், அவற்றுடைய பேப்பர் ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்கிற அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இது நிர்வாகப் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

