English
Due to the war situation between Iran, Israel, and the United States, the Hormuz Strait has been closed, leading to a shortage of petrol and diesel globally. To avoid a shortage of cooking gas in India caused by the Middle East conflict, the central government has ordered oil refineries to increase LPG production. The Iran vs. America, Israel war has also imposed a ban on supplying propane and butane gases, which are essential for LPG production, to petrochemical companies. Refineries are being directed to increase LPG production, and the government-owned Indian Oil Corporation...
It has been ordered to sell only to three oil companies: Bharat Petroleum Corporation Limited and Hindustan Petroleum Corporation Limited. In India's LPG demand, about 90% was supplied by Middle Eastern countries, but now that it has been banned, the central government has issued an emergency order.
Tanglish
Iraan, Israel, Amerika idaiyeyana poor soozhal kaaranamaaga Haarmus jalasanthi moodappattu ulaga arangil petrol, diesel thattupaadu uruvaagum nilai erpatirukkiradhu. Maththiya kizhaakku poor soozhalaal, Indiaavil samayal erivaayu thattupaattai thavirka, LPG utpathiyai adhikarikka ennai suththikarippu nilaiyangalukku maththiya arasu uththaravittirukkiradhu. Iraan Vs Amerika, Israel poor LPG utpathikkuth thevaiyana propane, butane vaayugalaip petrokemikkal niruvanangalukku kodukkavum thadai vidithirukkiradhu. Suththikarippu nilaiyangal LPG utpathiyai adhikarikkavum, erivaayuvai arasukku sonthamaana Indian Oil Corporation,
Baarath Petroliyam Kaarrpareeshan Limited matrum Hindusthaan Petroliyam Kaarrpareeshan Limited aagiya moondru ennai niruvanangalukku mattume virkkavum uththaravittulladhu. Indhiyaavin LPG thevaiyil, sumaar 90% madhthiya kizhaakku naadugaley poorthi seythuvandha nilaiyil, adhu tharpothu thadaipattulladhaal madhthiya arasu avasarakkaala uththaravai pirappiththirukkiradhu.
Tamil
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, எல்பிஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரொப்பைன், பியூட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதித்திருக்கிறது.
சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயுவை அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் எல்பிஜி தேவையில், சுமார் 90% மத்திய கிழக்கு நாடுகளே பூர்த்தி செய்துவந்த நிலையில், அது தற்போது தடைபட்டுள்ளதால் மத்திய அரசு அவசரக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.