`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்… எங்கள் இலக்கு.!’ – தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம்.

தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள்.

யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள்.

டி.டி.வி.தினகரன்

எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்… பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுகவின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய அளவில் பாஜகவின் தலைமையும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

டி.டி.வி.தினகரன்

திமுகவிடம் 35 லிருந்து 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்பதோடு. கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்த தகவல், அது உண்மை. காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை.

தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள்.

இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம்.

இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. காரணம் எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.

எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு.

தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் பெறுவோம்

டி.டி.வி.தினகரன்

பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்பட்டு, அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று வெற்றிகரமாக அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள். ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Jayalalithaa’s Birthday: Edappadi Palaniswami and AIADMK members celebrated by cutting a grand cake!

Scud missiles rained down like rain from Afghanistan onto Pakistan.