`அதிமுக, திமுக-வை விமர்சிக்கும் விஜய், பாஜக-வை பற்றி பேசாதது ஏன்?’ – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்கள். சரி, அவர்களைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும். ஒரு பக்கம் மாபெரும் மக்கள் சக்தியாக நாம் நிற்கிறோம். இன்னொரு பக்கம் திமுக தலைமையில் சில கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் பாஜக தலைமையில் மற்றும் பலர்” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

பாஜக-வுடன் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அந்த கட்சியின் பெயரை குறிப்பிடாமல், பாஜக-வின் பெயரை மட்டும் குறிப்பிட்டு பேசியது, விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிக்கு பாஜக-தான் தலைமை என விஜய் மறைமுகமாகச் சொல்வதாக பேச்சுகள் எழுந்தன.

தவெக தலைவர் விஜய்

இதையடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “அமித் ஷா வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக-தான் தலைமை, கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடி பழனிசாமி எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். பி.ஜே.பி-க்கு நாங்கள் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி.ஐ விசாரணைக்குச் சென்று வந்த பின் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள் என்றார், எங்களுக்கு பொது எதிரி பா.ஜ.க என்றார், ஆனால் அவர் பா.ஜ.க-வை மட்டும் விமர்சிக்கவில்லை அது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “விஜய் எங்களுடைய கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

எங்களுடன் கூட்டணியில் இருந்தால்தான் அதைப் பற்றிப் பேச வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். எந்தக் கட்சி களத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தேர்தல் முடிந்தால்தான்  யார் இருக்கிறார்கள், யார் காணமால் போனார்கள் என்பதைப் பார்க்க முடியும்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

‘No funds for Iran’s Chabahar port’ – Is India withdrawing?

The state of water turning into a mirage; will waiting yield any benefit?!