English
As the Tamil Nadu Assembly elections approach, political parties are engaged in discussions about alliances. In this context, there are reports that the Tamil Nadu Congress party, which is part of the DMK alliance, is in alliance talks with Vijay's faction. In this situation, Vijay's father, S.A. Chandrasekar, met with journalists today and said, "Vijay's chances of winning are bright. Vijay says he wants a share in power. The Congress must accept that. The Congress is fading away by supporting some party after another. If they come to power, the Congress will return to its old state."
He has stated that the Congress should take advantage of the opportunity.
Tanglish
Tamizhaga sattamanrath therthal nerungum nilaiyil arasiya kadchigal koottani kuritha pechu vaarthaiyil eedupattu varugirargal. Andhavagaiyil DMK koottaniyil irukkum Tamizhaga Congress kadchi Vijayyin thavegavudan koottani pechuvaartthaiyil iruppadhagath thakavalgalum veliyagi varugiradhu. Thavega thalaivar Vijay indhach soozhalil Vijayyin thandhai S.A Chandrasekar indru seythiyalargalai santhiththappodhu, "Vijayyin vetri vaayppu piragasamaaga irukkiradhu. Aatchiyil pangu endru Vijay solgiraar. Athai Congress etrukkolla vendum. Etho oru kadchikku aadharavu koduthu, koduthu Congress theyndhu pogiradhu. Aatchi adhikaaraththukku vandhaal pazhaiya nilaiyikku Congress varum.
Kaangiras vaayppai payanpaduththik kollavendum" endru therivithirukkiraar.
Tamil
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, ” விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.