English
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஐங்கரன் (34). இவர் மீது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், வழக்குகளில் இருந்து தப்புவதற்காக தனது குடும்பத்துடன் தமிழகம் வந்து, ராமநாதபுரத்தில் வீடு எடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்தார். இலங்கையில் ஐங்கரன் மீது இருந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து, அவர் வழக்குகளில் இருந்து விடுபட இருந்ததால், மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் நேற்று அதிகாலை மன்னார் புறப்பட்டுச் சென்றார்.
Tamil
ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேர் கடற்படையினரால் கைது
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஐங்கரன் (34). இவர் மீது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், வழக்குகளில் இருந்து தப்புவதற்காக தனது குடும்பத்துடன் தமிழகம் வந்து, ராமநாதபுரத்தில் வீடு எடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்தார்.
இலங்கையில் ஐங்கரன் மீது இருந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து, அவர் வழக்குகளில் இருந்து விடுபட இருந்ததால், மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் நேற்று அதிகாலை மன்னார் புறப்பட்டுச் சென்றார்.
Click the link above to read the full article on the original website.