`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்’- திண்டுக்கல் ஐ.லியோனி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் லியோனி,” மத்திய அரசான, பாஜக அரசுதான் இந்த நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். அதற்கு முன்னால் இந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான்.

அப்படிபட்ட காங்கிரஸ் கட்சிக்கு நாமெல்லாம் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று தி.மு.க -வை எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். ​ஆனால் அப்படி நாமெல்லாம் தாங்கிப் பிடித்த காங்கிரஸ் கட்சி, இன்று வேறு ஒரு கூட்டணியில் சேர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நீட் தேர்வை முதன்முதலில் தமிழகத்தில் எழுத வைத்து, நுழைய வைத்தவர் அ.தி.மு.க. -வினுடைய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு ஏற்பட்ட முறைக்கேடுகளை கண்டித்ததோடு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என

இந்தியாவிலேயே முதன்முதலில்குரல் கொடுத்த ஒரே முதலமைச்சர் நம்முடைய மு.க. ஸ்டாலின் என்ற தி.மு.க -வின் தலைவர் தான்.

தேர்தலில் மக்கள் புறக்கணித்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் திராவிட இயக்கங்கள் மட்டுமே முன்னிற்கும்.

மத்தியில் பிரதமர் மோடி நாற்காலி சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகிய இரு கால்கள் முட்டுக்கொடுத்ததால் தான் தாங்கி நிற்கிறது. தமிழக முதல்வர் நாற்காலி விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய 4 செங்கல்களின் ஆதரவில் தான் நிற்கிறது. ஒரு செங்கல் உருகினாலும் ஆட்சி கவிழும்.

நீட் தேர்வுக்கு எதிராக வலுவான எதிர்ப்பையோ, கண்டனத்தையோ முதல்வர் இதுவரை தெரிவிக்கவில்லை. பாஜகவின் சர்க்கஸ் யானை போல தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். 41 உயிர்கள் பலியாக காரணமான மதம்பிடித்த யானை போன்றது இந்த ஆட்சி.

முதலமைச்சர் விஜய்

பா.ஜ.க -வின் தமிழிசை சௌந்தரராஜன் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த இடஒதுக்கீட்டால் தான் மருத்துவரானார். நீட் தேர்வு இல்லாமல் மருத்துவர்களை உருவாக்கியது திராவிட ஆட்சி.

நீட் தேர்வினால் இதுவரை 30 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 2.5 லட்சம் மாணவர்களின் மனநிலை பிரசவத்தில் குழந்தையை இழந்த தாயின் வலியைப் போன்றது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

The Tamil Nadu Chief Minister is acting like the BJP’s circus elephant – Dindigul I. Leoni

Pawan Kalyan: “Stop comparing with Vijay” – Pawan Kalyan’s appeal to his supporters