தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றப்போது, ‘இலாகா’ இல்லாத அமைச்சர்களாக 10 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ஐந்து நாள்கள் கழித்து, இப்போது யாருக்கு எந்தத் துறை என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
1. சி. ஜோசப் விஜய் – முதலமைச்சர்
பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல்.

2. என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கிராமப்புறக் கடன்கள் மற்றும் பாசனம், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.
3. ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாடு.
4. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.
5. கே.ஏ. செங்கோட்டையன் – நிதித்துறை அமைச்சர்
நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் படிகள்.
6. பி. வெங்கடரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்
உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு.

7. ஆர். நிர்மல்குமார் – ஆற்றல் மற்றும் சட்டத்துறை அமைச்சர்
மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்.
8. ராஜ்மோகன் – பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
பள்ளிக்கல்வி, தொல்லியல் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்.
9. டாக்டர் டி.கே. பிரபு – இயற்கை வளத்துறை அமைச்சர்
கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
10. செல்வி எஸ். கீர்த்தனா – தொழில்துறை அமைச்சர்
தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.