சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேசிய அறிவியல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பாராட்டு தெரிவித்தார். அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அறிவியல் விருது (ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்) வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த விருது, விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.

