“திருமா எடுத்த முடிவு; கேள்வி கேட்ட முதல்வர்.!” – திக்..திக்.. மூடில் தி.மு.க! | VCK

“தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. அதை மனதில் வைத்தே சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்” என்று காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார் விசிக தலைவரும் எம்.பியும் ஆன திருமாவளவன்.

தி.மு.க-வுடன் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  இரண்டு பொதுத்தொகுதிகள், ஆறு தனி தொகுதிகள் என மொத்தம் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் திருமாவளவன் வெளியிட்டார். அதில், தற்போது சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள பனையூர் பாபு, ஆளுர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு சீட் வழங்கபட வில்லை. வி.சி.கவின் துணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனுக்கு மட்டும் செய்யூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

இதை தவிற, கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் திருமாவளவனின் சகோதரி பானுமதியின் மகள் மாலதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது, வி.சி.க-வில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டியிட இருக்கிறார். ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் மாநில அரசியலில் கவனம் செலுத்த போகிறார், என்று அவர் கட்சியினர் ஒருபுறம் சொல்லி வருகிறார்கள். ஆனால் தேவையில்லாமல் ஒரு இடைத்தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியுள்ளது, தலைவர் அந்த இடத்தை வேறு யாருக்காவது ஒதுக்கியிருக்கிலாம் என்றும் ஒரு தரப்பில் கருத்தை முன்வைக்கிறார்கள்.

இந்நிலையில் தி.மு.க தலைமையும் திருமாவளவன் சட்டமன்றத்தில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. திருமாவளவன் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட போதே, தி.மு.க தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என முதல்வர் மூத்த அமைச்சர்களிடம் ஆலோசித்திருக்கிறார்.

இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு அண்ணா அறிவாலத்தில் டீ பார்டியை நடத்தியது தி.மு.க தலைமை. அந்த கூட்டத்திற்கு திருமாவளவனும் வந்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அவரிடம் முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக இந்த சீட் விவகாரம் குறித்து கேட்டிருக்கிறாராம்.

“எதற்காக நீங்கள், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். தேவையில்லாம ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் சிதம்பரம் தொகுதிக்கு வருமே ” என்று சொன்னவர், `பாலாஜிக்கும், ஆளுர் ஷாநவாஸ்க்கு சீட் இல்லாதது’ குறித்தும் கேட்டிருக்கிறார்.

அதற்கு திருமா, “மாநில அரசியலில் கவனம் செலுத்துவது தான் தற்போது உகந்தது. விஜய் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டுமெனில் நான் இங்கு களத்தில் நிற்க வேண்டியுள்ளது” என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், திருமாவின் கணக்கு வேறாக இருப்பதாக அவருடை கட்சியினர் சொல்கிறார்கள். “வேட்பாளராக தன்னை முன்னிருத்துவதற்கு முன்பே, நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஏற்கனவே நான்கு உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்ற போது, அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையில் தான் இருந்தார்கள். கட்சிக்கு புதிய முகங்களை அடையாளப்படுத்தி, அவர்களை நான் வழிநடத்தி செல்வது தான் எதிர்காலத்திற்கு நல்லது.

விஜய் இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெறுவார் என்று நினைக்கிறேன். அவர்கள் பிரிக்கும் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் தலித் வாக்குளாக இருக்கப்போகிறது. எனவே நாம் களத்தில் வலுவுடன் இல்லையென்றால் காலி செய்துவிடுவார்கள்.

தமிழக தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு முழுமையாக சாதகமாக இருக்குமா? என்று தெரியவில்லை. ஒருவேளை தொங்கு சட்டசபை வந்தால், நம் கட்சியின் உறுப்பினர்கள் நான் இருந்தால் மட்டுமே கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இதையெல்லாம் யோசித்துதான் நான் தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறேன்” என்று சொல்லியுள்ளாராம்.

திருமாவின் இந்த வாதம் ஒருபுறம் சரியாக இருந்தாலும் இதில் மற்றொரு சங்கதியும் உள்ளது என்கிறார்கள். அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் வி.சி.க எம்.எல்.ஏக்கள் முழுமையாக தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார்கள். இதே போன்று  வரும் காலங்களிலும் நடந்துவிடக்கூடாது. வி.சி.கவின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என நினைக்கிறார். தி.மு.க -வை கூட்டணிக் கட்சியாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு நம்முடைய விசுவாசிகளை களத்தில் இறக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அதைதாண்டி “ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. ” என்கிற முழக்கத்திற்கு இந்த தேர்தலில் வாய்ப்பு இருக்கும் என திருமா கருதுகிறார். தொங்கு சட்டசபை தமிழகத்தில் வந்தால், வி.சி.கவின் தேவை ஆளும் கட்சிக்கு பிரதானமாக இருக்கும். அப்போது  சட்டமன்ற உறுப்பினராக தான் இருந்தால் மட்டுமே, ஆளும் தரப்புடன் சரியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்கிற திட்டம் திருமாவிடம் உள்ளது. இந்த திட்டத்தை தி.மு.க -வும் அறிந்துள்ளது.

திருமாவின் திட்டத்தினை அறிந்துதான் முதல்வர் அவரிடமே நேரடியாக எதற்காக தேர்தலில் நிற்க வேண்டும் என்று கேட்டார். ஒருவேளை திருமா நினைப்பது போல மும்முனை போட்டியால் வாக்குகள் சிதறுமோ என தி.மு.க வும் நினைக்கிறது. அப்படி ஒரு நிலை வந்து, தி.மு.கவுக்கு  தனி மெஜாரிட்டி கிடைக்கவவில்லை என்றால், திருமாவின் குடைச்சல் கொடுப்பார் என்பதை நினைத்து  இப்போதே தி.மு.க இப்போது திக்.. திக்.. மோடுக்கு சென்றுள்ளதாம.! 


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Coimbatore South: ‘Target is a 50,000 vote difference; this is our pride issue’ – S.P. Velumani

Will the salary received decrease? What are the 5 important rules changing from April 1?