ஜூ.வி மெகா சர்வே: `பாஜக’ வேட்பாளர் விஜயதரணி வெல்வாரா?’ – தூத்துக்குடி, நெல்லை, குமரி களம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது.

அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பா.ஜ.க சார்பில் விஜயதரணி, நா.த.க சார்பில் மரிய ஸ்டெல்லா, த.வெ.க சார்பில் மைக்கேல் குமார் களத்தில் உள்ளனர். டி.டி.பிரவீன் தென்கேரள சி.எஸ்.ஐ சபை செயலாளராக உள்ளார். கேரளத்தைச் சேர்ந்தவருக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுக்கப்பட்டதான விமர்சனம் அவர்மீது உள்ளது.

விளவங்கோடு
விளவங்கோடு

விஜயதரணி காங்கிரஸ் சார்பில் மூன்றுமுறை வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்த அதிருப்தி தொகுதியில் நிலவுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளுக்குமே செல்வாக்குள்ள தொகுதி என்றாலும், சிறுபான்மை வாக்குகள் சிதறாமல் சென்றுவிடுவதால் காங்கிரஸ் வெல்லும்.

இவர்கள் தவிர தூத்துக்குடி- தென்காசி- திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தேர்தலில் கோயில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ, ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன், ராதாபுரம் தொகுதியில் அப்பாவு, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் என முன்னோடி அரசியல் புள்ளிகள் களத்தில் இருக்கின்றனர்.

இந்த தொகுதிகளின் கள நிலவரம் குறித்த விகடனின் மெகா சர்வே ரிப்போட் படிக்க க்ளிக் செய்யவும்!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Junior Vikatan Mega Survey | Who will win in the 51 constituencies from Karaikudi to Kanyakumari? Southern region

Junior Vikatan Mega Survey | Will Vaithilingam win? Thanjavur Thiruvarur Nagai Mayiladuthurai