ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ – அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரும் தி.மு.க-வின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான நாசரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

“ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறீர்கள், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்?”

“இந்தத் தொகுதி மண்ணின் மைந்தன் நான். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10,516 கோடி மதிப்பிலான திட்டங்களை தொகுதிக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

குறிப்பாக பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட டைடல் பார்க்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உறுதி செய்திருக்கிறோம்.

அடுத்து 36 கோடியில் ஆவடி பேருந்து நிலையம் (பணிகள் நடைபெற்று வருகிறது), 78.31 கோடியில் பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம், 36 கோடியில் அரசு பொதுமருத்துவமனை, 84 கோடியில் திருவேற்காடு கோயில் புனரமைப்புப் பணிகள் ஆகியவற்றை செய்துள்ளேன்.

தொகுதியில் 81,000 பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம். அறிவுசார் மையம், முதல்வர் படைப்பகம், சார் பதிவு அலுவலகம், ஸிஜிளி அலுவலகம், எனப் பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன”

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

“தேர்தலின் கதாநாயகனான தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது?”

“மகளிர் உரிமைத் தொகையை இருமடங்காக உயர்த்தி வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். அதோடு இல்லத்தரசிகளுக்காக 8,000 கூப்பன் திட்டத்துக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தி.மு.க வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது”

“உங்களை எதிர்த்து பா.ஜ.க களமிறங்கியிருக்கிறதே… த.வெ.க-வால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் சிதறுமா?”

“எந்தக் கட்சி போட்டியிட்டாலும் தொகுதியில் தி.மு.க-வுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களால் பெண்களிடையே மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. சிறுபான்மையின மக்களும் நிச்சயம் தி.மு.க-வுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.”

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

“இந்தத் தேர்தலில் ஆவடி தொகுதிக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறீர்கள்?”

“அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் ரூ. 138 கோடியில் ஆவடியில் நீதிமன்ற வளாகக் கட்டடப் பணிகள் தொடங்கப்படும். குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். ஆவடி தொகுதியில் ஸ்டேடியம் கட்ட துணை முதல்வர் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிவிட்டார். திருவேற்காடு நகராட்சியில் 500 கோடியில் குடிநீர் திட்ட பணிக்கு டென்டர் முடிக்கப்பட்டு விட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை ஆவடி தொகுதிக்குக் கொண்டு வந்துள்ளோம். குடிநீர் பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காணப்படும்.”

“உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?”

“கடந்த தேர்தலில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிட்ட போதே 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்தத் தடவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதைப் போல, ஒரு லட்சத்துக்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்!”


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

TOUSKA: Iran ignored the warning; consequence, the US seized the ship – the background of the incident?

‘Prediction’ before Trump’s announcement: Iran – Will Venezuela’s actions benefit them?