தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.!

கல்வித் துறையில்…

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையில்…
> தொழில்துறை வழித்தடங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை அமைக்க மாநிலங்களுக்கு உதவப்படும்.
> ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படும்.
> வானியற்பியல் மற்றும் வானியலுக்கான 4 தொலைநோக்கி வசதிகள் செய்து தரப்படும்,
> வடகிழக்கில் புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்,
> பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்படும்,
> கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு மானியக் கடன்.
ஐதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு : அதிவேக ரயில் பாதைகள்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “மும்பை – புனே, புனே – ஐதராபாத், ஐதராபாத் – பெங்களூரு, ஐதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு, டெல்லி – வாரணாசி, வாரணாசி – சிலிகுரி இடையே 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.” என்றார்.
மேலும் “இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் (PROI) பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் பங்கு பத்திரங்களில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். PROI-க்கான முதலீட்டை 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக அதிகரிக்க முன்மொழியப்படுகிறது.” என்றார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலையான சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்க, கிழக்கில் உள்ள டான்குனியை(Dankuni) மேற்கில் உள்ள சூரத்துடன் இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு வழித்தடங்களை நிறுவப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில், 20 புதிய நீர்வழிகள் செயல்படுத்தப்படும். ஒடிசாவில் உள்ள 5 தேசிய நீர்வழிகள் தொடங்கி, தல்ச்சர் மற்றும் அங்குல் போன்ற கனிம வளம் மிக்க பகுதிகளையும், கலிங்கநகர் போன்ற தொழில்துறை மையங்களையும் பாரதீப் மற்றும் தாம்ரா துறைமுகங்களுடன் இணைக்கும்.
உள்நாட்டு நீர்வழிகளுக்கு ஏற்ற கப்பல் பழுதுபார்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பு, வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்.” என்றார்.

மேலும், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture Utilization and Storage- CCUS) தொழில்நுட்பங்களில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.” என்றார்.
தொடர்ந்து, “5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், அதாவது, அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
2026-27-ம் ஆண்டில், பொது மூலதனத்தை ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.” என்றார்.
`இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0′
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “நாங்கள் இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0-ஐ தொடங்கவுள்ளோம், மேலும் தொழில்நுட்பத்தையும் திறமையான பணியாளர்களையும் உருவாக்குவதற்காகத் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களிலும் கவனம் செலுத்துவோம்.” என்றார்,

மேலும், “வருங்கால சாம்பியன்களை உருவாக்க ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் MSME வளர்ச்சி நிதியை அமைக்கப்படும்.” என்றார்,
தொடர்ந்து, “ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கனிம வளம் மிக்க மாநிலங்களில், அந்தத் துறையை வலுப்படுத்த அரிய-பூமி வழித்தடங்களை (Rare-earth Corridors) அமைக்கப்படும்.” என்றார்.
`மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ்’
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில்,, “இன்று, வெளியுலகில் வளங்கள் மற்றும் சப்ளை சங்கிலிக்கான தொடர்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி முறைகளை மாற்றியமைக்கின்றன.
அதே நேரத்தில் நீர், எரிசக்தி மற்றும் முக்கியமான கனிமங்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா விக்சித் பாரத்தை நோக்கி நம்பிக்கையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும்… லட்சத்தியத்தை உள்ளடக்கியதாக சமநிலைப்படுத்தும்.
வளரும் பொருளாதாரமாக, இந்தியா உலகளாவிய சந்தையோடு ஆழமாக இணைந்திருக்க வேண்டும்… ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும்… நிலையான முதலீட்டை ஈர்க்க வேண்டும்.” என்றார்,

மேலும், “காதி மற்றும் கைத்தறியை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் முயற்சியைத் தொடங்க உள்ளோம்.
உயர்தர விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு பிரத்யேக முயற்சி மேற்கொள்ளப்படும்.
வருங்கால சாம்பியன்களை உருவாக்க ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் MSME வளர்ச்சி நிதியை அமைக்கப்படும்.” என்றார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து உற்பத்தி மையமாக (Bio-Pharma Manufacturing hub) மேம்படுத்த, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி செலவில் ‘உயிரி மருந்து சக்தி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
இது உயிரியல் மற்றும் உயிரி மருந்துகளின் உள்நாட்டு உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும்.” என்றார்.
`மூன்று கொள்கைகள் முக்கியமாக எடுத்துகொள்ளப்பட்டுள்ளன’
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “கட்டமைப்புகளில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள மூன்று கொள்கைகள் முக்கியமாக எடுத்துகொள்ளப்பட்டுள்ளன.
1. வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் நிலைநிறுத்துதல்,
2. மக்கள், குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை வலுவான கூட்டாளிகளாக மாற்றுதல்,
3. ஒவ்வொரு குடும்பம், பிராந்தியம் மற்றும் பகுதிகளுக்கும் வளங்கள் மற்றும் வசதிகள் கிடைத்தல்.” எனக் குறிப்பிட்டார்,

மேலும், “பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நிலைநிறுத்தவும் ஆறு துறைகளில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
1. 7 முக்கிய துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல்,
2. பாரம்பரிய தொழில்துறை துறைகளைப் புத்துயிர் பெற செய்தல்,
3. வலுவான சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை உருவாக்குதல்,
4. உள்கட்டமைப்புக்கு உந்துதலை வழங்குதல்,
5. நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்,
6. நகர பொருளாதார பிராந்தியங்களை உருவாக்குதல்.!
`குடிமக்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளோம்’

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆத்மநிர்பாரதாவை(Aatmanirbharta) ஒரு முக்கிய புள்ளியாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறனையும், எரிசக்தி பாதுகாப்பையும் அதிகரித்துள்ளோம். மேலும் முக்கியமான இறக்குமதி சார்புகளைக் குறைத்துள்ளோம்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலிருந்தும் குடிமக்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளோம். வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், வீடு வாங்கும் திறன் மற்றும் மக்களுக்கு உலகளாவிய சேவைகளை ஆதரிப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் சுமார் 7% உயர் வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளன.
மேலும் வறுமைக் குறைப்பு மற்றும் நமது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
“பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

சரியாக 11 மணிக்கு 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது பட்ஜெட் அறிவிப்பை தொடங்கினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“12 ஆண்டுகளுக்கு முன், நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் நிலைத்தன்மை, நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி, மிதமான பணவீக்கத்துடன் இருந்து வருகிறது.” என்றார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், “ வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி கோவை,
மதுரை மெட்ரோ இரயில்,
தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
புதிய இரயில்வே திட்டங்கள்,

நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.” என பதிவிட்டுள்ளார்,
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிர்மலா சீதாராமன் & டீம்!
Union Minister for Finance and Corporate Affairs Smt Nirmala Sitharaman along with Minister of State for Finance Shri Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union Budget. The… pic.twitter.com/XhBbxwFeAS
— President of India (@rashtrapatibhvn) February 1, 2026
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி அமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் குடியரசுத் தலைவர் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிர்மலா சீதாராமன்!
#WATCH | Delhi | Union Finance Minister Nirmala Sitharaman, along with her team, calls on President Droupadi Murmu before presenting her ninth consecutive Union Budget pic.twitter.com/96H5JV5obv
— ANI (@ANI) February 1, 2026
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது குழுவினருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
மத்திய பட்ஜெட் : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சொல்வதென்ன?
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக இருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் செய்தியாளர்களிடம் அது குறித்து பேசுகையில், “நிதியமைச்சர் நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். பொருளாதார ஆய்வறிக்கை நல்ல பொருளாதார வளர்ச்சியை முன்னறிவித்துள்ளது, அந்த வளர்ச்சி வேலைவாய்ப்புகளுடன் வருமா என பார்க்க வேண்டும். ஏனெனில், வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி யாருக்கும் உதவாது. எனவே, இந்தியாவின் இளைஞர்களுக்காக இந்த நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளனர் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

அது தவிர, இன்னும் பல விஷயங்கள் இருக்கும். கேரளாவில் தேர்தல் வரவிருப்பதால், மத்திய அரசு எங்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கக்கூடும் என்பதைப் பார்க்க நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.
11 மணிக்கு…
இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து 9-வது முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்னும் பெருமை பெறுகிறார் நிர்மலா சீதாராமன்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு!
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை (பிப்.1) 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
நாளை ‘மத்திய பட்ஜெட் 2026’
நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட் தினம்.
மத்திய பட்ஜெட்டை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி… தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா – ஐரோப்ப ஒன்றிய ஒப்பந்தம்… உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதை சமாளிக்கும் வகையிலும்… இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
விவசாயம், ஏ.ஐ, மூத்த குடிமக்களின் நலன், வருமான வரி போன்றவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பட்ஜெட் தாக்கல் சுமார் 11 மணி அளவில் தொடங்கும்.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.