TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! – வேலூரில் விஜய் பேசியது என்ன?

வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், ” எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யாரையும் நம்பி ஓட்டு போட மாட்டோம்” என்று நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார்.

குட்டிகதை

தொடர்ந்து குட்டிகதையோடு பேசித்தொடங்கிய விஜய் , ” ஒரு பெரிய ஊரில் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் ஜங்ஷன். அங்கே ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை சீறிக்கொண்டு நிற்கிறது.

அந்த காளையை அப்புறப்படுத்தினால்தாம் அந்த இடம் அமைதியாகும். அந்த காளையை அடக்கி பழக்கப்பட்டவர்கள் அங்கே இல்லை. ஒரு சிலர் நாங்க பார்க்காத காளையா என இறங்குகிறார்கள்.

தவெக - விஜய்
தவெக – விஜய்

காளை அவர்கள் தூக்கி வீசி எறிகிறது. இப்போது ஒரு சின்னப்பையன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை அடக்க வருகிறான். ‘எங்களாலயே முடியல உன்னால எப்படி’னு மத்தவங்க குறைச்சு மதிப்பிடுறாங்க. ஆனா அந்த பையன் கெத்தா ஸ்டைலா உள்ள போறான். காளை சீறுது. பையன் பார்க்குறான். டக்குனு பாக்கெட்ல இருந்த புல்ல எடுத்து மாட்டுக்கு கொடுக்குறான். மாடு ரொம்ப அமைதியா புல்ல சாப்பிட்டுக்கிட்டே பையங்கிட்ட வந்திடுது.

அந்த காளைதான் தமிழ்நாட்டு அரசியல்!

ஒரு வயசானவர் எப்படிப்பா காளையை அடக்குனேன்னு கேட்டாரு. ‘ஐயா எனக்கு அந்த காளை கோபமா இருந்தா மாதிரி தெரியல. பசியா இருந்துதுன்னு உணர்ந்தேன். அதனால புல்ல கொடுத்த உடனே அமைதியா வந்துடுச்சு’னு சொன்னான். அவ்வளவுதாங்க. வயசு, அனுபவம் எதுவும் பெருசு இல்ல. பிரச்னையை எப்படி அணுகுறோங்றதுதான் முக்கியம். அந்த காளைதான் தமிழ்நாட்டு அரசியல். அந்த பெரியவர்தான் தமிழக மக்கள். அந்த பையன் தான் நீங்க நான் எல்லாம்..

உங்க எல்லாரையும் உங்க ஊர்ல நேர்ல வந்து சந்திக்கணுங்றதுதான் என்னோட ஆசை. ஆனா, நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுது. இப்போ நான் ஒரு உறுதி கொடுக்குறேன். நம்ம ஆட்சி அமைந்த உடனே ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேர்ல வரேன்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

நீங்க என்ன பிரதமரா ஆகப்போறீங்களா சார்?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டுனாரு.இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தலாம். நீங்க என்ன பிரதமரா ஆகப்போறீங்களா சார்?

இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் எதிரான போர். இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒழுங்கா நிர்வாகம் பண்ணாத ஸ்டாலினுக்கும் நடக்குற போர். இன்னும் சொல்லப்போனா ஸ்டாலின் சாருக்கும் விஜய்க்கும் நடக்கும் போர்

தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாம். ஆம், தமிழ்நாடு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனின் மாநிலமாக இருக்கிறது.

மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? இல்ல…

இது சாதாரண தேர்தல் இல்ல. 50 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலா பாருங்க. இது ஒரு அதிசய தேர்தல்.

எல்லாரும் சேர்ந்து ஒரே ஒருத்தனை எதிர்த்தாலும் போட்டி இங்க திமுகவுக்கும் தவெகவுக்கும்தான்.

என் மீது அவதூறு பரப்புவது மக்கள் மீது அவதூறு பரப்புவது போன்றது. எனக்கு அரசியல் தெரியாது என கூறுவது மக்களுக்கு அரசியல் தெரியாது என கூறுவது போன்றது. நானும் மக்களும் வேறில்லை.

மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா?

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

உங்களின் சொத்து மதிப்பு என்ன?

சில பேர் தாமாகவே வந்து வண்டியில் ஏறிக்கொள்கிறார்கள். சீரியஸா ஒரு போட்டி நடக்கும் போது இங்கே காமெடிக்கெல்லாம் இடம் இல்லை.

அரசியல்வாதிகளிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களின் சொத்து மதிப்பு என்ன? இப்போது உங்களின் சொத்து மதிப்பு என்ன? ஓப்பனாக அறிவிக்க முடியுமா?

கரூர் விஷயத்தில் எதற்காக என் மேல் பழியை தூக்கி போட்டீர்கள் முதல்வரே?

நான் ஒரு கூட்டம் நடத்த ஏன் இடம் கொடுப்பதில்லை?

சொன்னீங்களே செஞ்சிங்களா?

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கான உரிமை சார்ந்தது மட்டும் அல்ல, சிறுபான்மை மக்களுக்கான உரிமையும் சார்ந்தது. இது அண்ணா சொன்னது. அதுதான் நம்முடைய கொள்கையும்.

இங்கே அரசியல்வாதிகள் ஒரு சிலர் அமைதியாக இருந்தாலே போதும்.

மாத மாதம் மின் கட்டணம் கட்டும்படி கொண்டு வருவோம் என்றீர்களே சொன்னீங்களே செஞ்சிங்களா?

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

வாக்குறுதிகள்

நிறைய மலைகிராமங்களில் பஸ் வசதியும் மருத்துவமனை வசதியும் இல்லை. தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கொட்டி கிடக்குதாம். கேட்குறவன்லாம் என்ன கேசரி சாப்பிட்டுட்டு இருக்கானா? பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும்.

பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும்.

சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும்.

அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் முதல்தரமாக இருக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றப்படி பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.

இந்திய முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் கல்லூரிகளில் சேர்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்ட கலெக்டர், எஸ்.பிக்களில் பாதிக்கு பாதி பெண்களாக இருப்பார்கள்.

ஆட்டோ, டாக்சி, லாரி டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.

அறிவாலயம் பக்கமாக நிழலுக்கு ஒதுங்கினால் கூட ஸ்டாலின் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.

கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கூட்டணி ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி.

இது ஒரு விசில் புரட்சி எலெக்சன்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Supreme Court order: Will America refund the $133 billion tax collected so far?

Mexico: Violence erupts after drug cartel leader killed – Flights canceled