English
A sudden explosion at a firecracker factory in Andhra Pradesh has caused the death of 20 people, creating shock. A firecracker factory named Sooryasri has been operating near Kakinada in Andhra Pradesh. This firecracker factory, located between the fields of Andhra and Pattasu Vibhathuvayal, employs more than 25 to 30 people. As usual, today (Feb. 28), they were engaged in firecracker production.
In the afternoon, a major explosion occurred at a fireworks factory. More than 20 people lost their lives in this accident, with fireworks continuously exploding for over an hour. Additionally, those injured in the building collapse were rescued and admitted to the hospital for treatment. Andhra Pradesh - Fireworks Accident Upon receiving information about this fireworks factory accident, firefighters rushed to the scene and engaged in efforts to extinguish the fire.
Tanglish
Aandhira maanilathil ulla pattasu aalai ondril thideerana erpatta vedivipathil 20 per uyirilandha sambavam athirchiyai erpaduthi irukkiradhu. Aandhira maanilam Kaakinada aruge Sooryasree endra peyaril pattasu aalai ondru iyangi vandhirukkiradhu. Aandhira - pattasu vipathuvayal veligalukku naduvae amaindhirukkum inda pattasu aalaiyil 25 mudhal 30kkum merpattor velaipaarthu vandhullanar. Vazhakkam pol indru (Pip.28) pattasu utpathiyil eedupattu vandhullanar.
Pirpagalil aalaiyil thideerena periya vedi vipathu erpatulladhu. Sumar oru mani neraththukkum melaga thodarnthu pattasugal vediththa nilaiyil indha vipathil sikki 20 per uyirilandhanar. Melum kattida idipadugalil sikki padugayamadanthavargal meedkappattu maruthuvamanaiyil sikichchaikkaga anumathikkappattullanar. Andhra - pattasu vipathu indha pattasu aalai vipathu kurithu thagaval arindhadum viraindhu vantha theeyanaiyppu veerargal theeyai anaikkum muyarchiyil eedupattanar.
Tamil
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்திருக்கிறது.

வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர்.
வழக்கம்போல் இன்று( பிப்.28) பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.