English
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தோணி ஆற்றின் வழியாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்றபடி, ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. சுமார் 20 அடி உயரமுள்ள கோயிலின் பெரும்பகுதியை மூழ்கடித்து, வெள்ளம் பாய்ந்தோடியது.
Tamil
பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தோணி ஆற்றின் வழியாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்றபடி, ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. சுமார் 20 அடி உயரமுள்ள கோயிலின் பெரும்பகுதியை மூழ்கடித்து, வெள்ளம் பாய்ந்தோடியது.
Click the link above to read the full article on the original website.