பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

English

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வேகமெடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜன சக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


Tamil

பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வேகமெடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜன சக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு

டிரம்புடன் பிரதமர் பேசவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்