ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம்.

கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான். மதிமுக-வில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் திமுக-வில் இணைய வேண்டும் என்றே விரும்பினர். அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மாறும் என்பதால் அதை செய்யவில்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai Rains, IMD Tamilnadu Weather Live Updates: வடகிழக்கு பருவமழை தீவிரம் – 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – Indian Express – Tamil

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்