பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில், இப்போதைய அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக நிதிஷ் குமாருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இதன்படி, வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்படும்.
Click the link above to read the full article on the original website.