பொன்னேரி: சென்னை, புழல் – சிவராஜ் தெருவை சேர்ந்தவர் பரதராமர் (61). இவரது வீட்டின் அருகே அதே தெருவைச் சேர்ந்த குமரவேல் (43), காரை நிறுத்தி வந்துள்ளார். இதனால், இரு தரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டு பிப். 1-ம் தேதி குமரவேல், பரதராமர் வீட்டருகே கார் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு முற்றியது.
இதனால், குமரவேல், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பரதராமரையும், அவரது மருமகளையும் தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பரதராமர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப். 4-ம் தேதி உயிரிழந்தார்.
Click the link above to read the full article on the original website.