தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம்

சென்னை: தீவிரவாத தாக்குதலின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் பிடித்தது.

தமிழக காவல் துறையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாக செயல்படுகிறது. இந்த அணியானது கடந்த 10 முதல் 12-ம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை பிடித்தது. அதாவது, ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட ஆபத்துகளின் போது, விரைந்து செயல்பட்டு பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பதை நோக்கமாக வைத்து போட்டி நடத்தப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது” – ஓபிஎஸ்

“நல்லாட்சி, சமூக நீதிக்கு கிட்டிய வெற்றி” – பிஹார் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்