English
பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எனவே தேஜஸ்விக்கு எதிராக ராகோபூரில் மற்றொரு வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. இது கட்சியின் நலனுக்காக எடுத்த முடிவு. இந்த தேர்தலில் நான் போட்டியிட்டால், அது கட்சிப் பணிகளில் இருந்து எனது கவனத்தை திசை திருப்பும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Tamil
பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எனவே தேஜஸ்விக்கு எதிராக ராகோபூரில் மற்றொரு வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. இது கட்சியின் நலனுக்காக எடுத்த முடிவு. இந்த தேர்தலில் நான் போட்டியிட்டால், அது கட்சிப் பணிகளில் இருந்து எனது கவனத்தை திசை திருப்பும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.