English
DMK leader Stalin has said that shutting down the Naan Mudhalvan scheme would amount to stalling the development of Tamil Nadu’s youth.
The ‘Naan Mudhalvan’ scheme, launched by the previous DMK government, has been renamed ‘Skill Tamil Nadu’ on the X page, and all posts prior to May 15 have been deleted.

In a post issued by DMK leader M. K. Stalin regarding this,
You can change the name of the #நான்_முதல்வன் social media pages. You can delete the posts on them. But the achievements and gratitude of the நான் முதல்வன் scheme, which fulfilled the dreams of thousands of Jennifers like this, can never be erased from people’s minds. They have been deeply etched in their hearts and recorded in the annals of history. For the past 5 years, during my tenure, I have continuously said, “Study, study, study.” I launched my dream project, #நான்_முதல்வன், precisely to help young people who want to study and move forward. Blocking it would amount to blocking the growth of Tamil Nadu’s youth!
You can change the name of the #நான்_முதல்வன் Social Media pages. You can delete the posts on them.
— M.K.Stalin (@mkstalin) June 20, 2026
But the achievements of the நான் முதல்வன் scheme, which fulfilled the dreams of thousands of Jennifers, and the gratitude it inspired can never be deleted from people’s hearts. They are their… pic.twitter.com/yqycoIbpAE
Along with that, Stalin has also attached an interview video of a woman who studied under the Naan Mudhalvan scheme and passed.
Naan Mudhalvar Scheme - Skilled Tamil Nadu
After the DMK government took office, the ‘Naan Mudhalvan Scheme’ was launched in 2022 under the Tamil Nadu Skill Development Corporation.
Under this scheme, which was launched with the aim of improving the education, skills, and employment opportunities of young people and students, activities such as career guidance, skill development training, competitive exam coaching, and job fairs were conducted.
In addition, financial assistance was also provided to students from economically disadvantaged backgrounds who are preparing for the UPSC examination.
With the TVK government having taken charge after winning the assembly election in Tamil Nadu, the name of the ’Naan Mudhalvan’ scheme has been changed. The official X page has been renamed ‘Thiran Tamil Nadu’ (TN Skill).
It is also noteworthy that on that X page, all posts made during the previous administration, including photos and videos posted before May 15, were deleted, which had become a topic of discussion.
Stalling the 'Naan Mudhalvan' scheme... DMK leader Stalin condemns the move!
Tanglish
Naan Mudhalvan thittathai mudakkuvathu Tamilnaattu ilainjargalin valarchiyai mudakkum seyalaga amaindhuvidum ena DMK thalaivar Stalin theriviththullaar.
Munthaiya DMK arasaal thodangappatta ‘Naan Mudhalvan’ thittathin peyar X pakkathil ’Thiran Tamilnaadu’ ena maatram seiyyappattathodu, Mei 15aam thethikku munthaiya padhivugal anaiththum neekkappattirukkirathu.

Idhu kurithu DMK thalaivar Mu.Ka. Stalin veliyittirukkum padhivil,
Neengal #Naan_Mudhalvan Social Media pakkangalin peyarai maatralaam. Adhil irundha padhivugalai neekkam seiyalaam. Aanaal, idhupola aayiram Jenifargalin kanavai nanavaakkiya naan mudhalvan thittathin saadhanaiygalaiyum nandriyunarvaiyum makkal manangalil irundhu neekkave mudiyaadhu. Avai avargalin idhayathil aazhamaaga karuvoolathil padhivu seiyappattuvittana. Kadandha 5 aandugalaga, enadhu aatchikkaalathil “padinga, padinga, padinga” endru thodarndhu solli vandhen. Appadi padithu munnera virumbum ilainjargalukku udhavathaan #Naan_Mudhalvan enum en kanavuth thittathai thodanginen. Adhanai mudakkuvadhu Tamilnaattu ilainjargalin valarchiyai mudakkum seyalaga amaindhuvidum! endru padhivittullaar.
Neengal #Naan_Mudhalvan Social Media pakkangalin peyarai maatralaam. Adhil irundha padhivugalai delete seiyalaam.
— M.K.Stalin (@mkstalin) June 20, 2026
Aanaal, idhupola aayiram Jenifargalin kanavai nanavaakkiya naan mudhalvan thittathin saadhanagalaiyum nandriyunarvaiyum makkal manangalil irundhu Delete seiyave mudiyaadhu. Avai avargalin… pic.twitter.com/yqycoIbpAE
athanudan naan mudhalvan thittathil payinru thearchi petra pennin nerkaanal vidiyovaiyum Stalin inaiththullaar.
Naan Mudhalvar Thittam - Thiran Tamil Nadu
DMK arasu poruppetra piragu, Tamil Nadu Thiran Membaattuk kazhagatthin keezh, kadandha 2022 aam aandu ’Naan Mudhalvan Thittam’ thodangappattadhu.
Ilainjargal matrum maanavargalin kalvi, thiran matrum velaivaippu aagiyavatrai membaduththum nokkaththil thodangappatta indha thittaththin keezh, thozhil vazhikaattudhal, thiran membaattu payirchigal, pottith thervup payirchi, velaivaippu mugangal ullittaivai nadaththappattana.
Melum, UPSC theervukku thayaraagum porulaathaarathil pinthangiya maanavargalukku ookkaththogaiyum vazhangappattathu.
Tamilagaththil peravaith theervil vendru Taveka arasu poruppeetrirukkum nilaiyil, ’Naan Mudhalvan’ thittaththin peyar maatram seiyappattullathu. Athigaara poorvamaana X pakkaththin peyar ‘Thiran Tamilnaadu’ (TN Skill) endru maatram seiyappattullathu.
Melum, antha X pakkaththil Mei 15 aam thethikku munbu, kadantha aatchik kaalaththil padhividappatta pugaippadangal, vidiyokkal ulpada anaiththu padhivugalum neekkappattiruppathu pesuborulaagiyirunthathu kurippidaththakkathu.
Stalling the 'Naan Mudhalvan' scheme... DMK leader Stalin condemns the move!
Tamil
நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் எக்ஸ் பக்கத்தில் ’திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டதோடு, மே 15ஆம் தேதிக்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில்,
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை நீக்கம் செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்கவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக கரூவூலத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்! என்று பதிவிட்டுள்ளார்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின்… pic.twitter.com/yqycoIbpAE
— M.K.Stalin (@mkstalin) June 20, 2026
அதனுடன் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற பெண்ணின் நேர்காணல் விடியோவையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.
நான் முதல்வர் திட்டம் – திறன் தமிழ்நாடு
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு ’நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலில் வென்று தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும், அந்த எக்ஸ் பக்கத்தில் மே 15 ஆம் தேதிக்கு முன்பு, கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் உள்பட அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stalling the ‘Naan Mudhalvan’ scheme… DMK leader Stalin condemns the move!
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.


